உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நயாகரா அருவி நாடு கண்ட பேரறிஞர் 13 இத்தகைய திருநாட்டிற்கு அடிகோலிய பெருமை முதலில் கொலம்பஸைச் சார்ந்தது; பின்பு அமெரிக் கோவைச் சார்ந்தது. அவருக்குப் பின்பு, அடர்ந்த காடுகளுக்கிடையே பல துன்பங்களுக்கு ஆளாகி, அரும்பாடுபட்டு உள் நாட்டு நிலப்பகுதியை ஆராய்ந்து, 'இது வாழத்தக்க பகுதி, இது வாழத் தகாத பகுதி, இங்கு இன்னின்ன பொருள்கள் இயற் கையாகக் கிடைக்கின்றன,' என்பன போன்ற உண் மைகளை வெளிப்படுத்திய பெருமை உழைப்பால் உயர்ந்த வீரர்களுக்கு உரியது. இம்முயற்சியில் இவ் வீரர்கள் அடைந்த இன்னல்கள் பலவாகும். இவர்கள் சில இடங்களில் கொடிய விலங்குகளால் தாக்கப்பட்ட னர்; வேறு சில இடங்களில் காட்டாறுகளைக் கடக்க முடியாது தவித்தனர்; மேலும் சில இடங்களில் அந் நாட்டுக்கே உரிய பண்டை மக்களால் தாக்கப்பட் டனர்; பல நாட்கள் உணவின்றித் தவித்தனர். இவ் வரிய முயற்சியில் வெற்றி பெற்றோர் சிலரே; வெற்றி பெறாது வழியிலேயே மாண்டோர் பலராவர். வட அமெரிக்காவின் கிழக்குக் கரையிலிருந்து மேற்குக் கரை வரையில் நடந்து சென்று மேற்குக் கரையைக் கண்டறிய முயன்றவர் பலராவர். இம்முயற்சியில் அவர்கள் பல நூறு கல் தொலைவு பிரயாணம் செய்ய வேண்டியவராயினர். ஆயினும் என்ன? “உழைப் யின் வாரா உறுதிகள் இல்லை" என்னும் பொன் மொழியின் உண்மையை உள்ளவாறு உணர்ந்த அப் பெருமக்கள், உள்ளக் கிளர்ச்சியுடன் எடுத்த வினை யைத் தொடுத்து முடிக்க முற்பட்டனர். அங்ஙனம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/13&oldid=1692973" இலிருந்து மீள்விக்கப்பட்டது