உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 துணைப் பாடம் நயாகரா அருவிக்கு அருகில் 1750இல் "சிறு நயாகரா' என்ற பெயருடன் ஒரு கோட்டை கட்டம் பட்டது. 1806இல் போர்ட்டர் என்ற பெயர் கொண்ட நீதிபதி ஒருவர் அருவியின் கரையில் மான்செஸ்டர் என்னும் சிற்றூரை உண்டாக்கினார். 1835இல் நயாகரா ஆற்றின் குறுக்கே முதன் முதலாக ஒரு. பாலம் கட்டப்பட்டது. அதற்கு இருபது ஆண்டு களுக்குப் பிறகு தொங்கு பாலம் அமைக்கப்பட்டது. அப்பாலத்தைச் சுற்றிலும் ஒரு சிற்றூர் அமைந்தது. பின்னர் நாளடைவில் மான்செஸ்டர் என்னும் சிற்றூ ரும் தொங்கு பாலத்தருகில் உண்டான சிற்றூரும் ஒன்றாக இணைந்து, நயாகரா அருவி என்னும் நகர மாக மாறியது. கண்கவரும் காட்சி நயாகரா அருவியைப் பற்றிப் பல நூல்கள் வெளிவந்துள்ளன. ஓவியர், பாவலர்,எழுத்தாளர், வரலாற்றறிஞர், பல்வேறு கலைகளில் அறிஞராயுள்ள வர் எனப் பல திறப்பட்டவர் நயாகரா அருவியைப் பற்றிய பல விவரங்களை எழுதியுள்ளனர். எவரும் இவ்வருவியை எளிதிற் சென்று காணலாம். நமது நாட்டு முதலமைச்சராக உள்ள பண்டித ஜவாஹர் லால் நெஹ்ருவும் அமெரிக்கா சென்றிருந்த பொழுது இவ்வருவியைத் தம் விழியாரக் கண்டு உள்ளம் பூரித் தனர். இதன் அழகிய தோற்றத்தை நேரில் கண்டி ராதவருக்கு இதன் சிறப்பைப் பற்றிய நுணுக்கமான வருணனை தெளிவான கருத்தினைத் தராது. நேரில் கண்டவருக்கோ, இவ்வருணனை பயனற்றதாகத் 66

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/31&oldid=1692991" இலிருந்து மீள்விக்கப்பட்டது