________________
46 பட்டன. துணைப் பாடம் பல நாட்களுக்குத் தேவைப்பட்ட உணவுப் பொருள்கள், சமய நூல் உள்ளிட்ட பலவகை. நூல்கள், சுதேசிகள் விரும்பத்தக்க விளையாட்டுப் பொருள்கள், மருந்து வகைகள், தற்காப்புக்கான துப்பாக்கிகள், துப்பாக்கி மருந்து முதலிய பொருள் களை எருதுகள் தாங்கிச் சென்றன. சுதேசிகள் 'புது நாடு காண்போம்' என்னும் உள்ளக் கிளர்ச்சியுடன் பொதிமாடுகளை ஓட்டிச் சென்றனர். சமவெளிப் பகுதி இங்ஙனம் வடக்கு நோக்கிச் சென்ற லிவிங்ஸ் டன் *லீபா, ர்லீயாம்பி என்னும் ஆறுகளைக் கண்டார்; அவற்றின் போக்கைக் கண்டறிந்தார்; அவை பாயும் நாட்டுப்பகுதிகளையும் பார்த்தறிந்தார். அந்த ஆறுகள் பாயும் சமவெளிகள் இயற்கை எழில் நிறைந்தவை. அங்குப் பற்பல பயிர்களும் கனி தரும் தருக்களும் காட்சி அளித்தன. நறுமண மலர்கள் விழிகட்கு விருந்தளித்தன. பல நிறப் பறவைகள் வானில் வட்டமிட்டன. ஆறுகளுக்கு அண்மையிலிருந்த காடுகளில் கலைமான்களும்; காண்டாமிருகங்களும், கருங்குன்றுகள் போன்ற கரிகளும் உலவியதை லிவிங்ஸ்டன் கண்டார். அந்தச் சமவெளிப் பகுதியில் பற்பல இடங்களில் பழங்குடி மக்கள் வாழ்ந்துவந்தனர். ஒவ்வொரு தொகுதிக்கும் ஒரு தலைவன் இருந்தான். சில இடங் களில் பெண்ணரசியரும் இருந்தனர். இங்ஙனம் இருந்த ஆண்பால் தலைவர்களும், பெண்பால் தலைவர் * Leeba † Leeyambee