________________
விக்டோரியா அருவி 57 யாக அமைந்துள்ளது. அப்பாறைமீது அமைந்துள்ள சிறு தீவுகளால் சாம்பசி ஆற்று நீர் நான்கு பிரிவுக. ளாகப் பிரிந்து நானூறு அடிக்குக் கீழே உள்ள பாறைப் பகுதியில் பேரிரைச்சலுடன் அருவியாக விழுகின்றது. ஆற்றின் வலப்பக்கத்தில் முப்பத்தாறு கெஜம் அகலமுள்ள சரிவான அருவி அமைந் துள்ளது. அதனை அடுத்துள்ள அருவி ஐந்நூற்று எழுபத்து மூன்று கெஜம் அகலமுடையது. மூன்றாம் அருவி ஐந்நூற்று இருபத்தைந்து கெஜம் அகல முள்ளது. நான்காம் அருவியின் அகலம் அறு நூறு கெஜம். இதன் பெயர் 'வானவில் அருவி' என்பது. மூன்றாம் அருவிக்கும் நான்காம் அருவிக்கும் இடை யில் உள்ள தீவில் நின்றுதான் லிவிங்ஸ்டன் விக்டோ ரியா அருவியின் கண்கொள்ளாக் காட்சியைக் கண்டு களித்தார். ஆதலின், அத் தீ வு லிவிங்ஸ்டன் தீவு என்று அவர் பெயராலேயே வழங்கப்படுகின்றது. கவின்பெறு காட்சி நயாகரா அருவி திறந்த பரப்பில் விழுகின்றது. ஆயின், விக்டோரியா அருவி விழுமிடம் பாறைப் பாங்கானது. அருவிக்கு நேர் எதிரில் சிறிது தூரத் தில் பாறைக் குன்றுகள் உயரமான சுவர்களைப்போல் அமைந்துள்ளன. அவை நேரே செல்லும் அருவி நீரின் போக்கைத் தடை செய்கின்றன. பேரிரைச்ச லுடன் நானூறு அடி உயரத்திலிருந்து கீழே விழுகின்ற அருவி நீர், எதிரிலுள்ள பாறைச் சுவர் களில் மோதுறுகின்றது. இங்ஙனம் மோதுறுகின்ற அருவி நீர் சிதறுண்டு முகிற் கூட்டங்கள் போலவும், நீர்த்திவலைப் படலங்கள் போலவும் பல நூறு அடி