உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அருவிகள்.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விக்டோரியா அருவி 59 "யான் என்னையும் மறந்து நின்றேன்; நான் என் கண்களையே நம்பக்கூடவில்லை; இவ்வியத்தகு தோற்றம் எங்கிருந்து உண்டாகின்றது என்பதை அறிய விரும்பினேன்; அவ்விருப்பத்தால் சற்று மேல் நோக்கி நடந்தேன். இங்ஙனம் யான் சென்ற பொழுது, என் செவிகள் செவிடு படும்படி பெரு முழக்கம் கேட்டது. அம்முழக்கத்தின் காரணம் அறி யாது யான் திகைத்தேன்; திகைப்புடன் மேலும் சிறிது தூரம் விரைந்து சென்றேன். ஆ! நான் கண்ட காட்சி என்னென்பது! என் விழிகட்கு எதிரே பேரருவி ஒன்று காட்சி அளித்தது. அவ்வருவி ஏறத் தாழ ஒரு கல் தொலைவு பரந்து இருந்தது. ஆற்று நீர் ஏறக்குறைய நானூறு அடி உயரத்தினின்று கீழ் நோக்கி விழுந்துகொண்டிருந்தது. அ ங்ஙனம் விழுந்த ே தோற்றம், வெள்ளித்தகடு உருண்டோடிக் கீழ் நோக்கி விழுவது போன்று இருந்தது." “பேரொலி உண்டாவதற்கு என்ன காரணம் என்பதை யான் ஆராய்ந்தேன்; பரந்த அளவில் வரும் ஆறு மிகுந்த உயரத்திலிருந்து கீழ் நோக்கி விழுந்து பாறைகளுக்கு இடையே உள்ள குறுகிய இடத்தில் அகப்பட்டுப் பாய்ந்து செல்லுகின்றது; நீர் செல்ல வேண்டிய பரப்பளவு குறுகி விட்டதாலேயே பேரொலி எழும்புகிறது; பாறைகளில் மோதுறலால் ஆற்று நீர்த்திவலைகள் ஆவி போலப் பறந்து செல் கின் றன என்னும் உண்மையை உணர்ந்தேன். கண் கொள்ளா இவ்வியத்தகு காட்சியைக் கண்ட யான் கொண்ட மகிழ்ச்சிக்கு எல்லையில்லை.”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அருவிகள்.pdf/61&oldid=1693022" இலிருந்து மீள்விக்கப்பட்டது