________________
114 துணைப் பாடம் வது. இதன்கண் தலச் சிறப்பு, இறைவன் பெருமை, அகத்தியர் வரவு, செங்கண்மால் சிவனாக மாறுதல், திருவிழா, இறைவன் உலாக்கோலங் கொள்ளுதல், உலாவில் இறைவனுடன் வருவோர், இறைவனுக் குரிய சின்னங்கள், பலவகை வாத்தியங்கள், இறை வனைக் காணும் ஏழு பருவமங்கையர் நிலைகள் முதலி யன இந்நூலில் நன்கு விளக்கப்பட்டுள்ளன. பருவ மங்கையர் எழுவருள் பேதைப்பருவத்தாள் ஐந்து முதல் ஏழு வயதுக்கு உட்பட்டவள். அவள் இயல் பினை ஆசிரியர் விளக்கும் திறம், படித்து மகிழ்தற் குரியது. பிற நூல்கள் குற்றாலக்கோவை ஏறத்தாழ நானூறு செய்யுட் களைக் கொண்டது; ஆனால் இன்று கிடைத்துள்ளவை ஐம்பத்தெட்டுச் செய்யுட்களே ஆகும்; செம்பாகமான முறையில் சொல் நயமும், பொருள் நயமும் அமையப் பாடப்பெற்றது. புராணக் கதைகளைக் கூறி, அவற் றின் வாயிலாக இறைவனைப் புகழும் முறையில் -முன்றிலிடைத்
- 46
தாம்பைப் பிடிக்குந் தரம்போல வூருகின்ற பாம்பைப் பிடிக்கும் பிராயத்தாள் - பூம்பாவைச் சேய்க்குரைக்கும் உண்மையாள் சிற்றிலைச்சிற் றாறழிக்க தாய்க்குரைக்க வோடுந் தகைமையாள் -வாய்க்குணவா யுண்ணுவதும் வெண்மணற்சோ றூட்டுவது போல்மார்க்கம் பண்ணுவது மெய்போலப் பார்த்திருந்து -வண்ணமாய் பிள்ளைதனை ஊட்டியந்தப் பிள்ளையுண்ணாக் குற்றமெல்லாம் கிள்ளையுடன் ஏதோ கிளர்த்துவாள் - கிள்ளைபோற் பாவைதனைச் செஞ்சொற் பயில்விக்க வேணுமென்று பூவைதனை வேண்டிப் புகலுவாள்..."