உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏப்ரஹாம் லிங்கன்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

9 இருந்தோர் அவரைச் சிறந்தவரென மதிக்கத் தொடங்- கினர். புதிய குடிசை கட்டி முடிந்தது. அனைவரும் களிப்புக் கொண்டனர். எனினும், சிறிது காலத்திற் குள் லிங்கன் தாயார் அக்குடிசையில் நோய்வாய்ப் பட்டார். அதிகம் அறைவதேன்! பாவம்! அவ்வம் - மையார் தம்மை உயிரினும் மேலாக நேசித்து வந்த லிங்கனையும் அவர் தமக்கையையும் விட்டுக் கி.பி. 1818-ஆம் ஆண்டில் காலமானார். தம் தாயார் காலமானபோது லிங்கன் ஒன்பது வயது சிறுவராக இருந்தார். அவர் தமக்கையான சாரா (Sarah) என்பவள் பதினொரு வயதுடைய சிறு- மியாக இருந்தாள். தாயார் இறந்த பின்னர்ச் சாராவே சமையல் வேலை செய்து வந்தாள். லிங்கன் தம் தா யாரை நினைந்து நினைந்து வருந்தினார். தந்தையார் தம் பிள்ளைகளைத் தேற்றி ஆறுதல் கூறி வந்தார். குளிர் காலம் வந்தது. பாவம்! ஏழை லிங்கன் அணிந்திருந்த கரடித் தோலால் ஆன காற்சட்டையும் கிழிந்தது. அவர் குளிரால் மிகவும் துன்பப்பட்டார். அவர், பாதிரியார் ஒருவரைத் தம் தாயாரைப் புதைத்த இடத்திற்கு வந்து பிரார்த்தனை செய்யுமாறு வேண்டிக் கொண்டார். அப்பாதிரியாருக்கு லிங்கன் எழுதின கடிதம் ஒவ்வொருவர் கையிலும் சென்று, முடிவில் பாதிரியார் கைக்குக் கிடைத்தது. பாதிரியார் லிங்கன் தாயாரது கல்லறையண்டை நின்று பிரார்த்தனை புரிந்- தார். அப்போதுதான் லிங்கன் மனம் அமைதியுற்றது.