உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சுருளிமலை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 மு. கருணாநிதி கதையின் மையக் கட்டத்திலேயிருந்து தொடங்கி, முன் னும் பின்னும் வாசகர்களை இழுத்துச் செல்லும் முறையில் கதை யில் நடமாடுபவர்களைப் பற்றிய குறிப்புகள் முன் கூட்டியே அறிவிக்கப்பட வேண்டியதில்லை. சுருளிமலை' கதை, நிகழ்ச்சிகளின் மையக் கட்டத்திலே யிருந்து உருவாவதில்லை. ஒரு சிற்றூரின் வரலாற்று மையத் திலேதான் தோன்றுகிறது. அந்த ஊரிலுள்ள முக்கிய புள்ளி களின் மத்தியில் சுழன்றோடும் நிகழ்ச்சிகளே சுருளிமலை கதை யின் கருப் பொருள். அதனால் அவர்களைப் பற்றிய அறிமுகம் மிக அவசியமல்லவா? எல்லா குக்கிராமங்களையும் சிற்றூர் என்றே அழைக்கிறோம். ஆனால் இந்தக் கதையிலே வரும் சிற்றூருக்குப் பெயரும் சிற்றூரே! இப்போது சிற்றூரில் நுழைவோம். கட்டை வண்டியில் கண்டுதான் அந்த ஊருக்குள் பிரவேசிக்க வேண்டும். அல்லது நடந்து செல்லவேண்டும். அவ்வளவு நொடி நிறைந்த பாதை. குறுக்கும் நெடுக்குமாகப் பெரும் பெரும் பள்ளங்கள். இன்னல் பலவற்றைக் கடந்துதான் இன்பம் பெறவேண்டியிருக் கிறது என்ற இலக்கணத்தை மெய்ப்பது போல் அழகும் வளமும் மிக்க ஊர் சிற்றூர். ஊரின் முகப்பிலேயே செவ்விள நீர்க் குலை களுடன் வான்நோக்கி வளர்ந்திருக்கும் தென்னஞ்சோலை! அத னுள் அமர்ந்து விட்டால் மேனியை மெல்ல வருடித் தாலாட்டும் குளிர் தென்றல்! அதைக்கடந்து உட்சென்றால் எடுப்பான சிவன் கோயில் காளி கோயில் - மாரிகோயில் ! திருக்குளம்- அதனைச்சூழ்ந்து நான்கு தெருக்கள்! பட்டு விரித்தாற்போல் பச்சைப்புற்றரைகள்! அவைகளையொட்டித் தலையாட்டும் தங்க நிற நெல் மணிகள் குலுங்குகின்ற எழிற் கழனிகள் ! - சிவன் கோயில் மணியோசை-இசை முழக்கம் -காளி மாரி கோயில்களில் பம்பை, உடுக்கைகளின் ஓங்கார ஒலிகள்-செக் காடும் சப்தம்-கூடைக்காரிகளின் வியாபாரக் குரல்கள் - கோலி யடிக்கும் பிள்ளைகளின் இரைச்சல் - மாந்தோப்பின் நடுவில் அமைந்த பள்ளிக்கூடத்தில் பையன்கள் முழங்கும் வாய்ப்பாடு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுருளிமலை.pdf/6&oldid=1694867" இலிருந்து மீள்விக்கப்பட்டது