உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதம் 81 'இரு காங்கிரசில் நீங்கள் இந்திரா காந்தி தலைமை யில் உள்ள காங்கிரசை ஆதரிப்பதற்கு என்ன காரணம்?" என்று 1970-ஆம் ஆண்டு வெளிநாட்டில் நிருபர்கள் கேள்விக்கணைகளைத் தொடுத்தனர். சோஷலிசக் கொள் கைகள், முற்போக்குத் திட்டங்கள் திருமதி இந்திரா காந்தி அவர்களால் செயல்படுத்தப்படுவதால் அவை களைச் செயல்படுத்துகிற இடத்திலே இருக்கிற பிரதமர் அவர்களை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று பதில் வழங்கி யிருக்கிறேன். இந்த விபரங்கள் அப்பொழுது ஏடுகளில், வெளியாகியுள்ளன. காங்கிரசில் ஏற்பட்ட பிளவு முற்றி, 1971-ஆம் ஆண்டு தேர்தலில் அந்தப் பிளவு விரிவடைந்து அதன் பிறகு எவ்வளவோ காரியங்கள், கசப்பு உணர்ச்சிகள் தலை தூக்கியதையும் அனைவரும் அறிவோம். இந்தப் பிளவுக்குப் பிறகு நமது கழகத்திற்கும் புதிய காங்கிரசுக்கும் தான் தோழமையும், தேர்தல் உறவும் ஏற்பட்டதே தவிர, நமக்கும் பழைய காங்கிரசுக்கும் அப்படிப்பட்ட உறவு எதுவும் எதுவும் ஏற்படவில்லை. இன்னும் உறுதியாகச் சொல்லவேண்டுமானால் இன்றுவரையில் கழகத்திற்கும் பழைய காங்கிரசுக்கும், எந்தவிதமான அரசியல் உறவும் இல்லை. கழகத்தின் பண்பு, மாற்றுக்கட்சியின் மதிப்புமிகு. தலைவர்களிடத்தில் ஆயிரம் கொள்கை ! வேறுபாடுகள் இருந்தாலும் தனிப்பட்ட முறையில் அவர்களிடத்தில் பெரும் மரியாதை கொண்டு இயங்கி வருவதாகும். 1967-ல் மூதறிஞர் ராஜாஜி அவர்களுடன் கழகத் திற்கு இருந்த தொடர்பு, குடியரசுத் தலைவர் தேர்தலின் போது முழுமையாக அறுந்துவிட்டது என்றாலும், அவ ரது அறிவு, ஆற்றல், தியாகம் ஆகியவற்றிற்குத் தலை வணக்கம் செய்திடக் கழகம் என்றுமே தயங்கியதில்லை. அதற்கு அடையாளம் தான் ஓசூருக்கருகே அவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கலைஞர்_கடிதம்_8.pdf/95&oldid=1695503" இலிருந்து மீள்விக்கப்பட்டது