உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கடிதம் 8.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

100 கலைஞர் ரூபாயோ, ஐந்து ரூபாயோ தருகிறார்கள்; விசாரணைக் கமிஷன் செலவு நிதிக்காக! அப்போது எண்ணி மகிழ்கிறேன், எப்படிப்பட்ட அமைப்பு! எவ்வளவு பாசமிக்க பெருங் குடும்பம்! இந்தக் குடும்பத்தில் நாம் இணைந்திருக்கிறோம்! இதைவிட வாழ்வில் என்ன பெருமை வேண்டியிருக்கிறது! ஏடுகள் ஏசுகின்றன! நாராச நடை எழுத்துக்களை வீசுகின்றன! இவர்களின் முகம் காணும்போது அந்தக். கர்ண கடூரச் சொற்கள் எல்லாம் எங்கேயோ மறைந்து போகின்றன. நேற்று ஆகஸ்டு இரண்டாம் நாள் மாலை விசாரணைக் கமிஷன் நிதியளிக்க வந்தவர்களில் சென்னை 63-வது வட்டத்தைச் சேர்ந்த உடன்பிறப்புக்களும் இருந்தார்கள். என்னுடன் நிழற்படம் எடுத்துக் கொண்டார்கள். அதில் ஒருவருக்கு ஒரு கையே இல்லை! அவர் பெயர் பாண்டியன். இன்னொருவருக்கு ஒரு கால் இல்லை! அவர் பெயர் ஜோசப். மற்றொருவர் பெயர் இரண்டு கண்களுமே இல்லை. சோமசுந்தரம் - அவருக்கு, அந்தக் கண்ணில்லாத உடன்பிறப்பு, கழகத்திற்கு ஒளி கொடுக்க வருகிறார். கையில்லாத கண்மணி கழகத் தலைமையின் கரத்தை பலப்படுத்துவோம் என்கிறார். ஒரு காலற்றவர், தன்னுடைய மற்றொரு காலை கழகத்தின் இலட்சியப் வேன் என்கிறார்! பயணத்துக்குப் பயன்படுத்து