உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கலைஞர் கருணாநிதியின் சிறுகதைகள் ஊர் காளையர் நடைபோடத் தொடங்கினர். கந்தன் அந்த வாலிபர்களுக்கு இளந்தலைவனானான். கனிமொழியோ ஆனந்தக் கடலில் ஒளிவிட்டுப் புறப்படும் பூரண மதியம்போல் முகங் காட்டிப் பூரித்தாள். காவடிக் கந்தன் கைத்தறிக் கந்தனானான். கைத்தறியிலே வந்த பணம் அவன் தாராளச் செலவுக்குப் போத வில்லைதான்! கஷ்டப்பட்டான். ஆனாலும் கனிமொழியின் மனத் திற்கு விரோதமாக நடப்பதற்குப் பயப்பட்டான். காசின் மிராசுதார் மிருகண்டுவின் மகன்- பீ தாம்பரத்தின் மூளை வேலை செய்தது. ஊரிலே எழுந்துள்ள கொள்கைக்கோட்டையைத் தவிடுபொடியாக்கக் கருதினான். கந்தனின் நண்பனானான். அருமை பெருமைகளைப்பற்றி அடிக்கடி உபதேசித்தான் கந்தனுக்கு! கந்தனின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அவை களுக்குத் திருத்தங்கள் சில தருவதுபோல நடித்தான். அப்படி அவன் தந்த திருத்தங்களிலே ஒன்றுதான் பழனிக்கு ஆட்டக் காவடி எடுக்கலாம் என்பது! கந்தன் அந்தத் திருத்தத்திற்கு விளக்கம் கொடுக்கக், கனி மொழி கற்சிலையாக நின்றுகொண்டிருந்தாள் அன்றிரவு. நின்றுகொண்டிருந்த கந்தன், திடீரென அந்த இடத்தை விட்டு வேகமாக அகன்றான். மறுநாள் அவனது பழனிப் பயணம் ஆரம்பமாயிற்று. ஆட்டக் காவடி ஆட்டமும் பழனித் தெருக்களிலே பிரமாதமாக நடைபெற்றது. அவன் எதிர்பார்த்தபடியே, அங்கேயே அவனுக்கு மூன்று நான்கு கிராக்கிகள் மோதின. முந்நூறு ரூபாய் கிடைத் தது. எடுத்துக்கொண்டு ஊருக்குத் திரும்பினான். பணத்தைக் காட்டிக் கனிமொழியின் கோபத்தைப் போக்கிவிடலாம் என்ற நம்பிக்கையோடு வீட்டுக்குள் நுழைந்தான். அங்கே கனிமொழி இல்லை. அந்தப் பகுத்தறிவுச் சிட்டு எங்கேயோ பறந்து விட்டது. கட்டில் மேலே ஒரு காகிதச் சுருள் கிடந்தது. அதை எடுத்துப் பிரித்துப் பார்த்தான் கந்தன். பூரண 66 பொது வாழ்க்கை என்பது கரும்பைச் சுவைப்பது போல அல்ல ; கரும்பைக் கைகளால் தடவுவதுபோல! தடவிப் பார்த்தால்தான் தெரியும்-கை குத்திக் கொள்ளும் ! ❝ முழுதும் சுணை'கள் ற