உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:அணிவகுப்போம் அறபோருக்கு.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40

விட்டு, மீண்டும் மரத்தை நடச் சொன்னார்கள். அப்போதும் யானை மறுத்துவிட்டது. ஏன் யானை மறுக்கிறது, சாமி குற்றமா, என்று பயந்து போய் ஒருவன் கொடி மரம் நட வேண்டிய குழிக்கு அருகே சென்று பார்த்தான். அந்தக் குழியிலே ஒரு சிறு பூனைக்குட்டி உட்கார்ந்திருந்தது. அந்தப் பூனைக் குட்டிக்கு நம்மால் ஆபத்து வரக்கூடாது என்றல்லவா யானை தன்னுடைய பெரிய காலை அதன் மீது வைக்காமல் தயங்கி இருக்கிறது என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள். இதைத் தான் அண்ணா சொல்லி, யானை பெரிது தான், இருந்தாலும் அது சிறுபான்மைக்குக் கொடுக்கப்பட்ட மதிப்பு, பெரும்பான்மை என்ற யானை, சிறுபான்மையை அழிக்கக் கூடாது, அதைப் போலவே சட்டசபையிலே சிறுபான்மையாக இருக்கின்ற எங்களை யானை, பூனையைக் காப்பாற்றியதைப் போலக் காப்பாற்றுங்கள் என்று அண்ணா அவருக்கேயுரிய அழகுத் தமிழில் அந்த உவமையைச் சொன்னார். அதைத் தான் நான் அந்தக் காங்கிரஸ் நண்பருக்குச் சொன்னேன். பெரும்பான்மை என்பதற்காக எதையும் செய்து விடுவதா? பெரும்பான்மையின் பெருமையே, சிறுபான்மையைக் காப்பாற்றுவது தான். பாபர் மசூதி கட்டப்பட்டு பல நூறு ஆண்டுகள் ஆயிற்று என்றால் அதை இடித்துவிட்டு, அதே இடத்தில் ராமர் கோவில் கட்ட வேண்டுமா ? ஆகவே அவர்களுடைய நோக்கம் என்ன? ராமர் கோவில் கட்டுவதல்ல. பாபர் மசூதியை இடிப்பது. அவர்களின் நோக்கத்தை நாங்கள் எதிர்க்கிறோம். எனவே என்றைக்கு -