உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:உரிமைக் குரல்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 அதுதான் அந்த மானியம் நமக்கு வேண்டுமென்று போராடுகிற நேரத் தில் எதிர்க்கட்சிக்காரர்களுடைய உறுதுணை ஆளுங்கட்சிக்கு இருந்திட வேண்டும் என்று கேட்பது மத்திய அரசுக்கு விரோத மான போக்கு அல்ல என்பதை நான் இங்கே தெரிவித்துக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். திருமதி அனந்தநாயகி அவர்கள் ஒன்றைச் சொன்னார்கள். நான்-பிளான் எக்ஸ்பென்டிச்சர் அதிக மாக ஆகிக்கொண்டு போகிறது. ஆகவே எல்லா அரசாங்கங்களும் என்று அவர்கள் ஆங் ங்கிலத்தில் கூடச் சொன்னார்கள். They must reduce the non-pian Expenditure என்று அன்றைக்கு அழுத் தந்திருத்தமாக அவர்கள் சொன்னார்கள். நான்- பிளான் எக்ஸ் பெண்டிச்சர் என்பது என்ன? ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தில் ஐந்தாண்டுத் திட்டத்தினுடைய ஆரம்ப ஆண்டில் திட்டத்திற் கென்று செலவிடப்படுவது அடுத்த ஐந்தாண்டுத் திட்டத்தினுடைய ஆரம்ப ஆண்டில் திட்டமில்லாத செலவு ஆகிறது. நான் - பிளான் எக்ஸ்பென்டிச்சர். இப்போது ஐந்தாண்டுத் திட்ட ஆண்டில் ஆரம்ப ஆண்டில் ஆயிரம் ஆசிரியர்களை நீக்கியிருப்பதாக வைத்துக் கொள்வோம். அடுத்த 5-வது ஐந்தாண்டுத் திட்டத்தி னுடைய ஆரம்ப ஆண்டில் அது நான்-பிளான் எக்ஸ்பெண்டிச்சரில் வந்துவிடும். அதைக் குறைக்க வேண்டும் என்கின்ற அம்மை யாரின் வாதத்தை ஒப்புக் கொண்டால் அந்த ஆயிரம் ஆசி களை. திட்டமில்லாத செலவை நாங்கள் குறைக்கப் போகிறோம்; நீங்கள் வீட்டுக்குப் போங்கள்* என்று சொல்ல வேண்டிய நிலை அரசாங்கத்திற்கு ஏற்பட்டு விடும். அதேபோல ஒரு ஐந்தாண்டுத் திட்டத்தினுடைய ஆரம்ப ஆண்டில் ஒரு நூறு மருத்துவ மனை களைக் கட்டுவதாகத் திட்டம். இந்தத் திட்டம் போட்டு பிறகு அந்த ஐந்தாண்டுகள் முடிந்து அடுத்த ஐந்தாவது ஐந்தாண்டுத் திட்டத்தினுடைய ஆரம்பத்தில் அந்த மருத்துவ மனைகள் எல்லாம் நான்- பிளான்... எக்ஸ்பென்டிச்சரில் வந்து விடுகிறது. திட்ட மில்லாத செலவில் வந்து விடுகிறது. அப்படி வரும்போது. திட்டமில்லாத செலவைக் குறைக்க வேண்டுமென்பதற்காக அந்த மருத்துவ மலைகளை இழுத்து மூடிவிடவும் முடியாது. அந்தச் செலவுகளை,பராமரிப்புகளைக் குறைத்து விடவும் இயலாது. " ஆசிரியர் திருமதி.த.ந. அனந்தநாயகி : ஒரு ஐந்தாண்டுத் திட்டம் முடிந்து அடுத்த ஐந்தாண்டுத் திட்டம் ஆரம்பிக்கும்போது அப் போது நான்-ப்ளான் எக்ஸ்பெண்டிச்சர் ஏற்பட்டால் அதை ஒத்துக் கொள்ளலாம். ஆனால் வருடா வருடம் உங்கள் நான்- ப்ளான் எக்ஸ்பென்டிச்சர் மேலே போய்க்கொண்டிருக்கிறது. 68--69, 69-70. 70-71 அதனாலே எந்த வருட ஐந்தாண்டுத் திட்டம் முடிந்ததும், எந்த வருட புதிய ஐந்தாண்டுத் திட்டம் தொடங்கியது என்றும் சொல்ல வேண்டும். 1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உரிமைக்_குரல்.pdf/20&oldid=1701912" இலிருந்து மீள்விக்கப்பட்டது