உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 அரசிடமிருந்து -O தென்னாட்டுக்கென்று இவ்வளவு தொகைபெற்று செலவு செய்திருக்கிறேன் என்று தைரியத்தோடு – துணிவோடு சொல்லி அல்ல - காங் கிரசு வெற்றி பெற்றிருப்பது! அவர்கள் பெற்ற வெற்றியில் முக்காலே மூன்று வீசம் வெற்றி பணத்தால் தான்! பணத்தால் தான் !! இதை நேர்மையாகப் பெற்ற வெற்றியென்று அவர் களாலேயே சொல்ல முடியாது. அவர்களது மனச் சாட்சியும் அதை ஒப்புக்கொள்ளாது அந்த வெற்றி போலி வெற்றி ! நான் குறிப்பிட்டதுபோல அறுபத்து மூன்று லட்சம் பேர்கள் காங்கிரசை வெறுக்கிறார்கள். ஐம்பது லட்சம் பேர்கள் தான் - அதுவும் பணத் தாசை காரணமாகக் காளைமாட்டு பெட்டியில் வோட்டு போட்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாம் குளித்தலைத் தொகுதி வாக்காளர்கள் செய்ததுபோல செய்திருந் தால் – பணத்தையும் று பெற்றுக்கொண்டு நல்ல பாடம் கற்பித்திருந்தால் - அங்கெல்லாம் காங்கிரசு நிச்சயம் கவிழ்ந்தே போயிருக்கும். 6 று குளித்தலையிலே என்ன நடந்தது ? எத்தனையோ இடங்களில் பணம் விளையாடியது. சிமிண்ட் மூட்டை கள் விளையாடின. "நான் ஒரு ரூபாய் தருகிறேன் எனக்கே வோட்டுப் போடு" என்று வெற்றிலையோடு தருகிற சீட்டோடு - கையிலே ரூபாய் நோட்டை வைத்து அழுத்தினார்கள். நானே நேரில் பார்த் தேன்; பல இடங்களில் கேள்விப்பட்டேன் ! நாங்கள் பட்டப்பகலில் சென்று பிரச்சாரம் செய்தோம்; இது போல மேடை அமைத்து பகிரங்கமாக வோட்டுக் கேட்டோம்! ஆனால், எதிரிகள் பகிரங்கமாகவா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/10&oldid=1703197" இலிருந்து மீள்விக்கப்பட்டது