உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ 29 துக் கொண்டார்-என்பதெல்லாம் உங்களுக்கு நன் றாகத் தெரியும். ஆனால், இடையில் ஒரு மாத காலம் பேசினார். இப்போது உங்களிடையே மிகவும் அழ காக, கருத்தாழத்துடன் அறிஞர் அண்ணா அவர் களின் பேச்சுக்கு ஈடாகப் பேசுகிறார் என்றால் என்ன பொருள்? அவர் தோற்றார்; பேச்சாளரானார். தோழர் அரவக்குறிச்சி இரத்தினமும் தோற்றார் ஆனால், உடனடியாக என் தொகுதியில் நூறு கழகங் கள் அமைத்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பேன்" என்கிறார் உணர்ச்சியோடு. மதுரை முத்து சொல்லுகிறார், "பணமும், பாவை யும் கொண்டுதான் தன்னை வெற்றி பெற இயலாது செய்துவிட்டது காங்கிரசு" என்று, நான் நினைத் தேன் "பணமும் பாவையும்" என்றொரு புத்தகம் யாரோ ஒருவர் எழுதியிருக்கிறாரே அதைக் கொடுத் துத்தான் வோட்டு பெற்றார்களோ என்று, அதுவல்ல வாம்! வோட்டுக்காக பணம் தந்தனர் காங்கிரசார் என்பதோடு மதுரைக்கு அருகில் உள்ள காந்தி ஆசிரமத்திலிருந்து கூட்டம் கூட்டமாகப் பாவையர் வந்து வோட்டுக் கேட்டார்களாம் காங்கிரசுக்காக! அப்படி இருக்கையில் முத்து சென்றால் எப்படி கிடைக்கும் வோட்டு? ஆகவே அவர் தோற்கடிக்கப் பட்டார் ஆனாலும் இன்று என் வெற்றி விழாவிலே கலந்துகொள்ள ஓடி வந்திருக்கிறார். முசிரியிலே முத்துக்கருப்பன் - அங்கு கழகம் வளர்ந்திருக்கும் நிலையில் - அவருக்கிருக்கும் குறைந்த வசதியில் குறைவான வோட்டுகள் தான் பெறுவார் என்று கருதினோம். இரண்டாயிரம் ரூபாய்கள் தான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/29&oldid=1703216" இலிருந்து மீள்விக்கப்பட்டது