உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியாரைத் துணைக் கோடல் குளித்தலைப் பள்ளியிலே இடமில்லை. ஆகவே, ஒரு சிறுவன் மாடு மேய்த்துக் கொண்டிருக்கிறான்- என்கிற நிலை இங்கு ஏற்படுமேயானால் அது நாம் எல்லாரும் தலை குனியக்கூடிய ஒரு வெட்கக்கேடான காரியந்தான். அந்த மாணவன் மாடு மேய்க்கும் நேரத்திலே தான் செய்யும் குறையை உணரமாட் டான். அதுபோலவே அவனது பெற்றோர்கள் அவன் மாடு மேய்த்துப் பொழுது போக்குகிற நேரத்தில் தாங்கள் செய்யும் தவறை உணரமாட்டார்கள். அந்த மாணவன் இருபது வயதை யடைந்து, அவனுக்குத் திருமணத்திற்காகப் பெண் பார்க்கின்ற நேரத்திலே, பெண் வீட்டார், “பையன் எவ்வளவு படித்திருக் கிறான்?" என்று கேட்கும்போது, பெற்றோர் உணர் வார்கள். "எவ்வளவு பெரிய தவறைச் செய்துவிட் டோம்" என்று. தாய் தகப்பனார் ஏழையாகி விட்ட காரணத் தால் - பையன் வேலை தேடி யலையும்போது - அலுவ லகத்திலே சென்று "ஐயா! எனக்கொரு வேலை யென்று கேட்க-"நீ எதுவரை படித்திருக்கிறாய்? " என்று அங்கிருப்போர் கேட்கும் நேரத்தில் அவன் உணர்வான். தான் செய்த தவறை! தன் பெற்றோர் தனக்கிழைத்த தீங்கை. ஆகவேதான் அத்தகைய எதிர்கால சமுதாயம் நம்மைச் சபிக்காம லிருப்பதற்கும், அவர்களுடைய சாபத்திற்கு ஆளாகாமல் இருப்பதற்கும், இன்றைய 9

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/36&oldid=1703223" இலிருந்து மீள்விக்கப்பட்டது