உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

41 6 99 குறளை வைத்துக்கொண்டு ஒரு பெண்ணைக் கூப்பிட்டு "அம்மையே ! ! ஊரிலே மழையில்லை. கொஞ்சம் மழை பெய்யச் சொல்! என்றால், அந்தப் பெண் தெருவிலே வந்து நின்று, அல்லது கழனிக்கு அருகிலே சென்று, “வருணபகவானே ! மழையைத் ! தா!" என்று சொன்னால், சொன்னவுடன் மழை பெய்யவில்லை யென்றால் என்ன கருதுவது? ஓகோ திருக்குறளின்படி, திருக்குறள் தந்திருக்கிற இலக் கணத்தின்படி இந்தப் பெண் கணவனைத் தெய்வ மாக மதிக்கவில்லை. ஆகவே, " மழையே வா " என்ற வுடன் “மழை பெய்யவில்லை" என்று அந்தப் பெண் ணுக்கு நிச்சயம் இழுக்கு கற்பித்துவிடுவோம். இப் படி யாராவது சில குறும்புக்காரர்கள் கிளப்புவார்கள் ளென்று கருதித்தானோ என்னவோ, வள்ளுவர் பெண்கள் பெய் எனில் பெய்யும் மழைக்கு ஒப்பாவர் என்று மிகமிகத் தெள்ளத் தெளிவாக - யாரும் இங்கு, அங்கு இழுத்து அசைத்து எந்தவிதப் புதிய பொருளும் கொள்ள முடியாத வகையிலே எழுதி வைத்திருக்கிறார். ஆனாலும், சிலர் கொஞ்சம் இழுத் துப்பார்த்து; கொஞ்சம் புராணீகக் 'கல'ரும் கொடுத்து, குறளைக் கொஞ்சம் தங்கள் விருப்பத் துக்கு மாற்றிவைத்தார்கள். . - அதைப்போலவே இன்னுமொரு குறள் மிகமிக வேடிக்கை ! இலக்கணம் தெரிந்த ஆசிரியர்கள்; இலக்கணம் புரிந்த அறிஞர்கள் நல்ல முறையிலே உணர்வார்கள். அதற்கு உரை எழுதிய வரதராசனார் கூட - கந்தய்யா கூட - குறிப்பிலே எழுதுகிற நேரத் திலே " இதற்கு சுப்பிரமணிய பிள்ளை இப்படி உரை கூறுவார்- அதுவும் ஓரளவு பொருந்துமாறு" என்று எழுதி வைத்தார்கள். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/41&oldid=1703228" இலிருந்து மீள்விக்கப்பட்டது