உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 னாக இருக்கச் செய்ய வேண்டிய கடமை தந்தைக்கு உரியது என்று சொல்லுகிறார் வள்ளுவர்! ஆனால், இந்தக் காலத்திலே தந்தைகளோ, மகனை மன்றத்தில் ஏற்றுவதற்கா விரும்புகிறார்கள்? எங்கே, இவன் மன்றத்துக்குச் சென்று விடுவானோ என்றல்லவா அஞ்சுகிறார்கள். வள்ளுவருடைய குறளிலே இம்மாதிரியான நீதி கள் மாத்திரமல்ல; இலக்கிய வளம் மாத்திரமல்ல; நல்ல நல்ல அரசியல் கருத்துக்களும் அதிலே உண்டு! ய அவர் சொல்லுகிறார், ஓரிடத்தில்- பொருட் பாலில்- பெரியாரைத் துணைக் கோடல்-என்ற அத்தி யாயத்தில் - ஆட்சி பீடத்திலிருப்பவர்கள் ஆட்சி சரிவர நடைபெற பெரியாரைத் பெரியாரைத் துணைக்கொள்ள வேண்டும் என்று சொல்லுகிறார். று பெரியாரைத் துணைக்கோடல் என்றால் எப்படி? எந்தப் பெரியாரைத் துணைகொள்ளச் சொல்லுகிறார்? எது செய்தாலும் கண்டிக்காமல், ஆதரிக்கிற பெரி யாரையல்ல; என்ன சொல்லுகிறார் தெரியுமா? இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன் கெடுப்பா ரிலானும் கெடும் தட்டிக் கேட்க ஆளில்லாத மன்னன் - தட்டிக் கேட்கக்கூடிய பெரியாரைத் துணையாகப் பெற்றிருக். காத மன்னன்-பகைவர்கள் இல்லாமலேயே தானே அழிந்து விடுவான். மூக்கணாங்கயிறு இல்லாத மாடு எப்படி ஆகிவிடுமோ; அதுபோல கெடுப்பாரிலானும் கெடுவான், இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/46&oldid=1703233" இலிருந்து மீள்விக்கப்பட்டது