உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 இடங்களை மட்டுமே கைப்பற்றி, திராவிட முன்னேற் றக் கழகத்தின் நல்ல பெரும் முன்னணி வீரர்களையும் தென்னகத்தின் வழிகாட்டியாக விளங்குகிற அறிஞர் அண்ணா அவர்களையும் சட்டசபைக்கு அனுப்பி வைத்து, புளகாங்கிதத்தோடும். பெருமிதத்தோடும் வீற்றிருக்கின்ற இந்த நேரத்தில், எதிர்காலத்தில் நாம் பெறவேண்டிய வெற்றிகள் குறித்தும். வளர வேண்டிய விதங்கள் குறித்தும் இந்தப் பாராட்டுக் கூட்டத்திலே கிறேன். எடுத்துக்கூறக் கடமைப்பட்டிருக் திராவிட முன்னேற்றக்கழம் தேர்தலில் ஈடுபட்ட காரணத்தால் புடம்போட்டு எடுக்கப்பட்ட தங்கமாக மாறியிருக்கிறது என்பதை யாரும் மறுக்கமுடியாது. நாம் பதினைந்து இடங்களைத்தான் பெற்றோம். நம்மை ஒழித்துவிட வேண்டுமென்று கூறிக்கொண் டிருந்த காங்கிரசு ஏறத்தாழ நூற்றைம்பது இடங் களில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. என்றாலும் இரண்டிற்குமிடையே உள்ள வோட்டுகள் வித்தியா சத்தையும் ஆதரித்த அல்லது வெறுத்த மக்கள் தொகையின் வேறுபாட்டையும் கூர்ந்து கவனித்தால் இந்த நாட்டில் காங்கிரசுக்கு அடுத்தபடியான வலி வும் பொலிவும் கொண்டகட்சி திராவிட முன்னேற்றக் கழகந்தான் என்ற மகத்தான பேருண்மை புலப்படும். நாம் தேர்தலில் போட்டியிட எண்ணிய நேரத் தில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு சீட்டா வது கிடைக்குமா? என்று ஆரூடம் கணித்தவர் பலப் பலர். மாற்றுக் கட்சிகளிலே! நாம் அப்போதெல் லாம் அவர்களுக்குப் பலமுறை பதில் சொல்லி வந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/62&oldid=1703249" இலிருந்து மீள்விக்கப்பட்டது