உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 மாகத் தூங்கிவிட்ட இருதயத்திலும் - கொஞ்சம் சூடேற்றி, உயிர் கொடுத்து அந்தக் குறுகிய இடைக் காலத்திலே, யார் யாருக்கு எப்படி யெப்படி சொத்துக் களைப் பங்கு பிரிக்க வேண்டுமென்று எழுதி வாங்கிக் கொண்டு, பிறகு அவனைச் சாக விட்டுவிடுவார்களாம். அதே போன்ற விஞ்ஞான முறையில் தான், சென்ற தடவை இறந்து விட்ட காங்கிரசு, ஐந்துவருட காலத்திற்கு உயிர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. அந்த முறையிலே, இப்போது இழந்ததையும் பெற்றிருக் கிறது. இறந்தவன் உயிர் பெற்றிருக்கிறான். ஐந்து வருடங்களுக்குப் பிறகு நிச்சயமாகச் செத்துவிடுவதற் காகத்தான் என்பதை, அவர்கள் தேர் தலிலே நடந்து கொண்ட முறைகளினாலும் - தமிழர்களைப் புறக் கணிக்கின்ற தன்மையாலும் - திராவிடர்களை அலட் சியப்படுத்துகிற - துச்சமெனக்கருதுகிற காரணத் தாலும் நன்கு புலப்பட்டுவிட்டது. நிச்சயமாக அவர் கள் இனிமேல் தொடர்ந்து இந்த நாட்டை ஆள முடியாது- தென்னாட்டைப் பொறுத்தவரை திராவிட நாட்டைப் பொறுத்தவரை! - சுதந்திரம் பெற்றவர்கள் நாங்கள் தானே! உங்க ளுக்கு உரிமைகளை வழங்கியவர்கள் நாங்கள் தானே, என்று சட்ட மன்றத்திலே கூவிக் கேட்கிறார்கள். இது எப்படி இருக்கிறது? நான்தானடி பெற்றேனடி மகளே உன்னை-நான் அழைக்கிறேன் கட்டிலறைக்கு -வர மறுக்கிறாயே என்று ஒரு அப்பன் கேட்டால், அது எவ்வளவு அவமானகரமானதோ அதைப் போலிருக்கிறது-நாங்கள் தானே உரிமையை வழங்கி னோம், அடங்கி நடவுங்கள் என்று கேட்கிறார்கள். வெள்ளைக்காரன் கேட்டான்; முசோலினி கேட்டான்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/96&oldid=1703645" இலிருந்து மீள்விக்கப்பட்டது