உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

123 ஒரு பெண், பெண், கையிலே கையிலே ஒரு தாமரை மலரை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறாள் என்று ஓவியம் தீட்டினால். அதிலே இயற்கை இருக்கிறது. அதைப் பார்த்த ஒரு கவிஞனுக்கு, அதிலிருந்து ஒரு கவிதையும் தோன்றும். கையிலே வைத்திருக்கிறாளே தாமரை மலர், அந்த மலருக்கும், அவள் முகத்துக் கும் கொஞ்சம்கூட வித்தியாசந் தெரியவில்லை; பார்த்தாயா? எந்த அளவுக்கு அந்தச் சித்திரத்தைத் தீட்டியிருக்கிறான் பார்த்தாயா? என்று அந்தக் கவிஞன் அங்கே ஒரு கவிதை எழுதிவிடுவான். அது இயற்கைக்கு முரண்படாத கலை. ஆனால், நமது தமிழ்நாட்டு ஓவியர்கள் மனிதனுக்குத் தேவையான கலையை, இயற்கைக்கு முரண்பட்ட அளவிலே பிறகு எழுதத் தொடங்கினார்கள், கையிலே தாமரை மலரை வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிற பெண்ணை, அந்தத் தாமரை மலரிலேயே நிற்கவைத்து, தண்ணீரிலே மிதக்கவிட்டார்கள். அப்படி நிறுத்தப் பட்ட பெண்ணுக்கு இரண்டு கைகளல்ல நான்கு கைகள் என்றும் சொன்னார்கள், அந்தப் பெண் ணுக்கு, "இலக்குமி " என்று பெயரிட்டார்கள். இது தான் இயற்கைக்கு முரண்பட்ட கலை. இயற்கை யோடு இணையாத கலை - என்று அறிவியக்கத்தவர் கள் கூறுகிறார்கள். நானும் கூறுகிறேன், எங்கும் என்னுடைய கருத்துகளைச் சொல்ல வேண்டுமென்ற அத்தகைய நெஞ்சுறுதி படைத்துவிட்ட காரணத்தால். - இராமாயணத்திலே ஒரு அம்பு ; அதைப் போலவே சங்க இலக்கியத்திலே ஒரு அம்பு. இந்த இரண்டு அம்புகளும் நம்முடைய நாட்டிலே தேவைப் படுகிற கலையை எவ்வளவு அழகாகச் சொல்லுகின்றன

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/123&oldid=1703672" இலிருந்து மீள்விக்கப்பட்டது