உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

137 லும் அவர்கள் என் மரியாதைக் குரியவர்கள். அவர் கள் தங்கள் உயிரையும் திரணமாக மதித்து நாட்டு விடுதலைக்காகத் தியாகத் தீயில் குதித்தவர்கள்! அவர்களில் சிலர் மாண்டு விட்டார்கள். சிலர் அநியாயமாகத் தூக்கிலிடப்பட்டு விட்டார்கள்! சிலர் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்கள். அந்த வீரர் களுக்கு நான் வீர வணக்கம் செலுத்தக் கடமைப் பட்டவன்! அவர்கள் விடுதலைப் போராட்டத்தை. எதிர்பார்த்து ஏங்கிக் கிடந்தவர்கள். தாயகத்தின்மீது படிந்துள்ள கரையை அகற்றுவதற்குத் துடியாய்த் துடித்தவர்கள். என்னைபோலவே, என் விடுதலைப் படையினரைப் போலவே எமது தாயகத்தின் சுதந் திரத்திற்காகத் தவங்கிடந்த உத்தமர்கள். அவர்கள் எல்லாம் யார்? என்னுடைய அறப் போரின் உச்ச கட்டத்திலே வெறிகொண்டு உம்மைத் தாக்கி - வெற்றியின் விளிம்பைத் தொடும் நேரத்தில் வீழ்ந்துபோன வீரர்கள் எல்லாம் யார்? இந்த நாட்டு மண்ணுக்குரியவர்கள் மட்டுமல்ல ; சொன்னால் வெட்கம் - சொல்லாவிட்டால் என்வாதத் திற்கு வலுவில்லாமற் போய்விடும் - இதோ இருக் கிறாரே, மன்றத்துப் பெரியவர், முதுகிழவர். இவர் ஒரு காலத்தில் தயாரித்து வைத்த சேனையாகும் அது ! என் அன்புக்கும் பாராட்டுதலுக்கு முரிய அந்த சேனைக்குப் பயிற்சி தந்து வளர்த்த பெருமை, இதுவரையில் என்னையும், என் கிளர்ச்சியையும் எதிர்த்து வாதிட்ட பெரியவரையே சேரும். ை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/137&oldid=1703686" இலிருந்து மீள்விக்கப்பட்டது