உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தி மு க திறந்த புத்தகம்.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 - - பித்தம் பிடித்து ஆட்சி நடத்துவோர்க்கு நாளொரு திட்டம், பொழுதொரு சட்டம் என்று கூட அல்ல; மணிக்கு மணி ஒரு முடிவு - மறுபடியும் நிமிஷத்தில் அதை மாற்றும் மன நோய் மதுக் கொள்கையோ ஒரே கிறுகிறுப்பு டீரென அரசு திடீ வணிகம் என ஒரு சுறுசுறுப்பு - ஏன் ? ஏன் ? அரசுடைமையில் அவ்வளவு அக்கறை வந்து விட்டதா? எல்லாம் பாசமுள்ள "உடன்பிறவாச் சோதரம்" ஏகபோகமாகச் சம்பாதிக்கப் போட்டுள்ள படப்பை திட்டம். இதோ ஒரு தடைச் சட்டம் - பிளாஸ்டிக்; மனிதனைக் கொல்லும் பேய்! அதைப் பார்த்து நான் அழுது புலம்பினேன் - இப்படி ஒப்பாரி - அடுத்த நாளே வர வேண்டியது வந்ததும் பிளாஸ்டிக்கிலேயே சாலை! காரணம்; முளைத்து விட்டது கரன்சி சோலை! உழைத்தவன் கேட்டான் ஊதியம்; ஒரு காசு இல்லை போனசுக்கும் பெப்பே உனக்கும் பெப்பே - - - - ஆனால் 400 கோடியில் ஒய்யார உப்பரிகை நிர்வாகத்தை “நரக”மாக்கிக் கொண்டு நிர்வாகத்துக்கு ஆயிரம் கோடியில் ஒரு 'நகர'மாம்; கெட்டக் கேடு - எதற்கோ பட்டுக் குஞ்சம் என்பார்களே; அதைப் போல! தொன்னையை குப்புறக் கவிழ்த்தது போன்ற குடிசைகளில் எண்ணெயற்ற தலையர்களாய் ஏங்கிக் கிடக்கும் ஏழைகளை விரட்டி விட்டு; சென்னையை அழகுபடுத்த இருபதாயிரம் கோடியில் ஒரு புதிய திட்டமாம்! - ஆடம்பரம், கேளிக்கை நடத்துகிறது அடக்கு முறை, அட்டகாசம் புரிகிறது - எட்டுப் பேர், பத்துப் பேர் என்று