உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தென்பாண்டிச் சிங்கம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

288. கலைஞர் மு. கருணாநிதி நாலு கோட்டையை விட்டுப் புறப்பட்டவர்கள் ஓரளவு மரங்கள் நிறைந்ததும் குறுகியதுமான ஒரு பாதையில் தங்களது குதிரைகளை விரட்டிக் கொண்டு சென்றபோது அந்தி சாய ஆரம்பித்தது. தீவிர இருட்டில், பாதையில் இன்னும் எச்சரிக்கையோடு போக வேண்டுமென்பதற்காக எல்லாக் குதிரைகளையும் வைரமுத்தன் கைகாட்டி நிறுத்தினான். முன்னால் செல்வதற்கு ஒரு குதிரை வீரனைத் தயார்ப்படுத்தி, அவன் கையில் ஒரு தீப்பந்தமும் தரப்பட்டது. அவன் வழிகாட்டிக் கொண்டு குதிரையை வேகமாக நடத்தினான். அவன் பின்னால் வைரமுத்தன், ஆதப்பன் குதிரைகள் சென்றன. அவர்களையொட்டிப் பக்க வாட்டிலும் பின்னாலும் மற்ற வீரர்களின் குதிரைகள் தொடர்ந்தன. அந்திப் பொழுது முற்றிலும் மாறி இருள் சூழ்ந்து கொண்டது. அந்த இரு பட்டமங்கலத்துக் குதிரைகளின் குளம்படியோசை அமைதியைக் குலைத்து++ கொண்டிருந்தது. அந்தக் குதிரைகளின் எண்ணிக்கை பதினைந்துக்கு மேல் போகாது. அவற்றின் குளம்படிச் சப்தம் கேட்டுக் கொண்டிருந்த அந்த இருட்டில். அவைகளுக்கு எதிராக நூறு குதிரைகள் வருவது போன்ற குளம்படிச் சப்தம் பயங்கரமாகக் கேட்பதை வைரமுத்தனும் ஆதப்பனும் பட்டமங்கலம் வீரர்களும் உணர்ந்தனர், எண்ணியபடியே சர்னல் அக்னியூ, தனது கை வரிசையைக் காட்டி விட்டான் என்று முடிவுகட்டிய வைரமுத்தன் தனது வாளை உருவிக்கொண்டு தயாரானான். கறுத்த ஆதப்பனும் ஆயத்தமானான். அவ்வாறே பட்டமங்கலத்து வீரர்களும்!