உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புராணப்போதை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புராணப்போதை தெரிந்தும் கண்ணைத் திறக்காமலேயே தூங்குவது போலவே, துரியோதனனைக் கவனியாது கண் மூடிப் படுத்திருந்தார், எம்பிரான் திருமாலின் அவதாரமான கண்ணன்! ஏன் தெரியுமா? கண் விழித்தால், துரியோதனன், போரில் துணைவா, என்பான். முதலில் கேட்பதால், மறுக்க முடியாது. ஒப்பித் தீரவேண்டும். கண்ணனுக்கு. துரியோதனனுக் குத் துணைபோக மனமில்லை, இதனை வெளிப்படக் கூறி மறுத்திடவோ, துணிவுமில்லை. இந்த நிலையில் கண் மூடி மௌனியாகத் துயில் கொண்டு படுத்திருப்பதைப் போலப் பாசாங்கு செய்தார், மாதவன், மாமன்னன் துரியோதனன் வந்ததைக் கவனிக்காது போலவே! கண்ணை மூடிக் கொண்டே, 'அர்ஜுனா வருக, என்று அழைத்தார்.கோபாலன். உடனே அர்ஜுனன் அங்கு வந்து சேர்ந்தான், கோபாலன் மனநிலை யறிந்து. வந்த அர்ஜுனன் கண்ணனின் தலைமாட்டில், ஏற் கனவே, முன்னதாகவே வந்து காத்துக் கிடக்கும் துரி யோதனனைப் பார்த்தான். பின் கண்ணனின் கால் பக் கம் உட்கார்ந்து கொண்டான். உடனே கண்ணன் கண்ணை விழித்து 'காண்டீபா, வருக, வருக, என்ன தேவை என்று கேட்டார். அர்ஜுனன் உடனே, பாரதப் போரில் தங்கள் துணை பாண்டவராகிய எங்களுக்குத் தேவை என்று கேட்டான். 42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:புராணப்போதை.pdf/43&oldid=1706092" இலிருந்து மீள்விக்கப்பட்டது