உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மழை பெருமழை தமிழ்மழை.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அங்கே சொல்லிவிட்டு இங்கே சொல்லாவிட்டால் நீங்கள் என்னைப் பற்றி என்ன கருதுவீர்கள் என்பதற்காக அல்ல; உண்மையிலேயே ஒரு நாள், இரண்டு நாள் அல்ல இங்கேயே நின்று கொண்டு உங்களுடைய திருமுகங்களை எல்லாம் என் மீது நீங்கள் வீசும் அன்புப் பெருக்கையெல்லாம் உங்களுடைய கனிவானப் பார்வையையெல்லாம், உங்களுடைய அன்புப் பெருக்கையெல்லாம் அனுபவித்தவாறு விழிமூடாமல் பார்த்துக் கொண்டிருந்தால் என்ற நிலையில்தான் உங்கள் முன்னால் உங்களுடைய அன்பன் உங்களுடைய சகோதரன் கொண்டிருக்கிறேன். உங்கள் அடிமை நான் நின்று இலக்கிய உரை இங்கே நான் ஆற்றுவேன் என்று கடந்த நான்கைந்து நாட்களாக நடத்தப்படுகின்ற விளம்பரங்கள் நம்முடைய டத்தோ அவர்களால் குறிப்புக் காட்டப்பட்டிருக்கின்றது. தமிழர்களுக்கு இலக்கியம் என்பதைத் தவிர வேறு வரலாறு கிடையாது. வரலாறு இருக்கிறது. ஆனால் எழுதப்படவில்லை. எழுதப்படாத காரணத்தால்தான் இந்தியாவின் வரலாறே தமிழகத்திலிருந்து எழுதப்பட வேண்டுமென்று மனோன்மணீயம் சுந்தரனார் சுட்டிக்காட்டியதையும், அது குறித்து அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பேரறிஞர் அண்ணா அவர்கள் பேசியதையும் நினைவுபடுத்தியிருக்கிறேன். நான் பல முறை இந்திய நாட்டு வரலாறு கங்கை கரையிலிருந்து எழுதப்பட்டதற்குப் பதிலாக காவிரிக் கரையிலிருந்து எழுதப்பட வேண்டுமென்பதுதான் வரலாற்றுப் பேராசிரியர்களுடைய துணிவான, திட்டவட்டமான, தெளிவான முடிவாகும். 20 20