உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன்னர் சங்கர்.pdf/286

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞர் மு.கருணாநிதி பகைவர்கள் நல்ல பண்பாளர்கள் என்று! அதனால் மாந்தியப் பனுக்குத் தைரியமூட்டி அவனையும் காளி மன்னனுடன் அனுப்பி வைத்தார். மாரிக்கவுண்டன்பாளையம் மக்கள் கடலில் மிதந்து கொண் டிருப்பது போல் அவ்வளவு பெருங் கூட்டம். கொங்கு வேளா ளப் பெருமக்கள். வேட்டுவப் பெருமக்கள் மற்றும் பல்வேறு வகுப்பினர், வேறுபாடு கருதாமல் ஆசான் ராக்கியண்ணனின் முக தரிசனம் காணச் சாரைசாரையாக எல்லாப் பாதை களிலும் வந்து கொண்டிருந்தனர். காணியாளர்கள், நிலக் கிழார்கள், குறுநில ஆட்சியாளர்கள், எல்லைக் காவல் ஆட்சி யாளர்கள், தமது பரிவாரங்களுடன் ராக்கியண்ணனின் பாச் றையில் நிறைந்திருந்தார்கள். குன்றுடையான், சின்னமலைக் கொழுந்து, மாயவர், பொன் னர், சங்கர், வீரமலை, வையம்பெருமான் ஆகியோர் ராக்கி யண்ணனின் உடல் வைக்கப்பட்டிருந்த மேடைக்கு அருகே கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். அவர்களது குடும்பத்துப் பெண்கள் மற்றும் உறவுக்காரப் பெண்கள் அனை வரும் வேறொரு பகுதியில் பாசறைக்குள்ளே சோக சித்திரங் களாகக் காணப்பட்டனர். தாமரைநாச்சியார், சிலம்பாயி, முத்தாயி, பவளாயி, அருக்காணித் தங்கம். குப்பாயி இவர் களைச் சூழ்ந்து நூற்றுக்கணக்கில் மகளிர் கண்கலங்க வீற்றி ருந்தனர். -> தலையூர் மன்னன் வந்து விட்ட செய்தியை ஒரு வீரன், மாயவர் காதில் போடவே, அவர் எழுந்து பாசறையின் வாயிற்பக்கம் சென்றார். தலையூரான் மாந்தியப்பனுடன் வந் திறங்குவதைப் பார்த்து, அவனை மாயவர் எதிர்கொண்டு மெளனச் செய்கையின் மூலம் அழைத்துக் கொண்டு ஆசான் உடல் வைக்கப்பட்டிருக்குமிடத்துக்கு வந்தார். என்ன இருந்தாலும் ஆசான் உடல் பெரிய இரும்புத் தூண் ஒன்று சாய்ந்து கிடப்பது போல் கிடப்பதைக் கண்டதும் தலை யூர்க் காளியின் கண்கள் அவனையறியாமலே கலங்கி விட்டன. தளபதி பராக்கிரமன் கையிலிருந்த மல்லிகை மாலையை வாங்கி ஆசானின் கழுத்தருகே கொண்டு போன காளி மன்னன் என்ன நினைத்தானோ தெரியவில்லை அந்த மாலையை ஆசானின் பாதங்களுக்குச் சூட்டி, அந்தப் பாதங்களைத் தொட் டுக் கும்பிட்டுத் தனது குரு பக்தியைக் காட்டிக் கொண்டான். - 277