உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை வாழ்க்கையில் உடன் பிறந்த தமையனாருடன் ஒன்றிக் கழித்த நாட்கள் அவரது உள்ளத்தில் அலைகள் போல எழுந்து மறைந்தன. இன்னும் இராமநாதபுரத்தில் சிறப்பான நிகழ்களுடன் மன்னர் பாஸ்கரர் முடிசூட்டுவிழா, நவராத்திரி விழா, திருஉத்திரகோசமங்கையர் கோயில் விழா சிருங்கேரி பீடாதிபதி வரவேற்புடன், சுவாமி விவேகானருக்கு வரவேற்பு இதழ் வாசித்து அளித்ததும் ஆகும்.

அமெரிக்க நாட்டு சிகாகோ நகரில் நடைபெற்ற சர்வ சமய மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்ட சுவாமி விவேகானந்தர் தாயகம் திரும்பும் வழியில் இராமநாதபுரத்திற்கு 25. 1. 1897ல் வருகை தந்தார். சுவாமிகளை தமது சொந்தக் செலவில் மன்னர் பாஸ்கர சேதுபதி சிகாகோவிற்கு அனுப்பி வைத்தவர் அல்லவா ! இந்திய நாட்டிற்கும் பேரும், புகழும் ஈட்டுவதற்குக் காரணமாக இருந்த மன்னர் பாஸ்கர சேதுபதி தமக்குச் செய்த உதவிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கவாமிகள் இலங்கை யாழ்ப்பாணத்தில் இருந்து முதலில் இந்திய மண்ணில் இராமநாதபுரம் மன்னருக்குச் சொந்தமான பாம்பன் துறைமுகத்தில் கரையிறங்கினார். மன்னர் பாஸ்கர சேதுபதியும் சமஸ்தான மக்களும் அளித்த வரவேற்பை ஏற்று ஆசி வழங்ய பிறகு மூன்று நாட்கள் மன்னரது பாம்பன் மாளிகையில் தங்கி மன்னருடன் ஆன்மீக விசயங்கள் பற்றி அளவளாவிய பிறகு இராமேஸ்வரம் திருக்கோயிலை தரிசித்த சுவாமிகள் இராமநாதபுரம் சமஸ்தானத்தில் மற்றொரு ஆலயமான திருப்புல்லாணி ஆதி ஜெகந்நாதப் பெருமாள் ஆலயத்தையும் தரிசித்தார். அங்கிருந்து இரட்டை

24