உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:திறமையின் திருஉருவம் இராஜா தினகர்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடுத்தார். தினகரருக்கு தனியாக மாளிகையொன்று அமைத்துக் கொள்வதற்காக ரூபாய் ஜம்பதினாயிரமும் அளித்தார். மேலும் அந்த மாளிகையின் பராமரிப்பிற்கும் தினகரரது சொந்தச் செலவுகளுக்குமாக மாதந்தோறும் ரூபாய் இரண்டாயிரம் மட்டும் இராமநாதபுரம் சமஸ்தானக் கருவூலத்தில் இருந்து பெற்றுக்கொள்வதற்கு ஆணையும் பிறப்பித்தார்.

உடன் பிறப்புக்களது உள்ளத்தின் மூலையில் ஒட்டியிருந்த வெறுப்பும், துவேசமும் உதிர்ந்து விட்ட சருகுகள் போல மறைந்து ஒழிந்தன.

அன்பென்னும் பிடியில் அகப்படாதார் யார் உளர்? அதிலும் மிகப்பெரிய சிந்தனைச் செல்வரும் சிந்தாந்தியுமான பாஸ்கரசேதுபதி மன்னரது வாஞ்சை நிறைந்த இந்தச் செயல் அவர்களது குடும்பப் பெருமையை நிலைநாட்டியது பண்பட்ட செயலாகப்

போற்றப்பட்டது.

இராமநாதபுரம் கோட்டைக்கு கிழக்கே ஒரு கல் தொலைவில் வளைந்து செல்லும் சிற்றாறு சூழ்ந்து கிழக்கு எல்லையாகக் கொண்டதும் மரம், செடி, கொடிகள் அடர்ந்து பசுமை கொழிக்கும், சன்மார்க்கத்தைப் போதித்த துறவி தாயுமானவர் யோக நிலையில் பல காலம் இருந்து சமாதி பெற்ற தலமும் அண்மையில் உள்ளது. இந்தப் பகுதியில் ஆன்மிக வாழ்க்கையில் சிறந்து விளங்கிய இஸ்லாமியத்துறவிகள் அடக்கம் பெற்று உள்ளனர். அந்தப் பகுதி மனத்திற்கு இனிமையையும் மட்டற்ற தனிமைக்கு மகிழ்ச்சியையும் ஏற்ற இடமாக இருப்பதை

அறிந்து அங்கு தமது கட்டிடப் பணிகளைத்

WW