உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/424

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

441


ரோமாபுரிப் பாண்டியன் 441 தங்களுடைய பாண்டியநாட்டைச் சேர்ந்தவர் அல்லவா? பொற்புமிக்க கொற்கை பற்றியும், அங்கே நடக்கும் பொலிவுமிக்க முத்துக்குளிப்பு பற்றியும் கதை கதையாகச் சொல்லிக்கொண்டே இருப்பார். வாழ்நாளில் எவ்வாறேனும் ஒருமுறையாவது இந்த முத்துக் குளிப்பு விழாவினைப் பார்த்திட மாட்டோமா என்னும் ஏக்கமே என் நெஞ்சை அரிக்கலாயிற்று. இன்னும் சிறிது காலம் சென்றால், கரிகாலரிடம் என் அண்ணன் வளர்த்துக் கொண்டு வரும் பகைமையினால், எங்கள் எதிர்காலமே கவிழ்ந்த கப்பலாகி விடுமோ என்கிற உள் நடுக்கமும் எனக்கு உண்டாகிவிட்டது. எனவே, இந்த ஆண்டு எப்பாடுபட்டாவது முத்துக்குளிப்பு விழாவிற்கு வந்தே தீருவது என்று துணிந்து கிளம்பிவிட்டேன். குதிரையோடு கொற்கைக்கே வந்திட்டால், நான் மன்னர்குடிப்பிறந்த மங்கைதான் என்று மற்றவர்கள் புரிந்து கொண்டு விடலாம் இல்லையா? அந்த அச்சத்தினால், கொற்கைக்கு வடக்கேயுள்ள ஒரு குப்பத்திலேயே குதிரையைக் கட்டி வைத்து விட்டுக் கால்நடையாகவே தங்கள் நகருக்குள் நுழைந்தேன். நான் இவ்வாறு புறப்பட்டு வந்தது என் அண்ணிக்கு மட்டுமே தெரியும்; அண்ணனுக்குத் தெரியாது. இந்த நிலையில் நான் தங்கள் அரண்மனைக்கு விருந்தாளியாக வந்தால் - ஆடம்பரமான வரவேற்புகளையெல்லாம் ஏற்றால் - அந்தச் செய்தி எப்படியும் என் அண்ணனுக்கு எட்டாமலா போகும்? பிறகு என்னை அவர் வாழ விடுவாரா? தங்களைப் பற்றியுந்தான் தங்கள் தந்தையார் என்ன நினைப் பார்? கரிகாலருந்தான் என்ன கருதுவார்? பொதுமக்களும் தாறுமாறான வதந்திகளையெல்லாம் தவழவிட மாட்டார்களா....?" தாமரை இப்படி ஒரு வினாவினை எழுப்பி தன் பேச்சினை நிறுத்திடவும் இளம்பெருவழுதிக்கு என்ன விடை பகர்வது என்றே தோன்றிடவில்லை. வாயினைத் திறந்திடாமல், அவன் அமைதியிலேயே அமிழ்ந்து போனான். ஆனால் அவன் விழிகளோ...!" மண்டபத்திற்கு வெளியே இருளைத் துழாவி, எதனையோ தேடுவது போல், பாசாங்குதான் செய்தன இளம்பெருவழுதியின் கண்கள். உண்மையில் தாமரையின் தளிருடலை மொய்த்திடவே அவை தவி யாய்த் தவித்தன. அவனைப் போலவே அவளும் நன்றாக நனைந்து விட்டாள் அல்லவா, மழையில்? அதனால் அவளது உடலோடு நெருக்க மான உறவு கொண்டுவிட்ட ஈரத்துகில்கள், இடியாப்பத்தின் மேல் இறைந்து கலந்திட்ட தேங்காய்ப் பூமாதிரி, அவளுடைய பருவச் செழு மையைப் பன்மடங்கு பெருக்கியே காட்டின. பால்வடியும் முகம் என்பார்களே அப்படி எழில் வழியும் முகம் - நிலவு முகம்! அதனைக் காணக்காண இளம்பெருவழுதியின் இதயத்தில் விளக்கவொண்ணாத