உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ரோமாபுரிப் பாண்டியன்.pdf/606

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ரோமாபுரிப் பாண்டியன்

627


ரோமாபுரிப் பாண்டியன் 627 கண்ணனார் நன்கு அறிந்தவர் அல்லவா? ஆகவேதான் செழியனை அழைத்து வருவதற்குப் பெருவழுதிப் பாண்டியன் தன்னுடைய மகள் முத்துநகையை அனுப்ப முடிவு செய்ததும், அவளிடம் கல்லணைச் சின் னம் பற்றிய கதையினைக் கூறிச் செழியனின் செல்வாக்கினைப் பயன் படுத்தி அதனைத் திரும்ப பெற்றிட முயலுமாறு மொழிந்தனுப்பினார் புலவர். ரோமாபுரிக்கு வந்த பின்னரோ செழியனிடம் அந்தச் சின்னத்தைப் பற்றி விவாதிப்பதற்கெல்லாம், முதல் நாளில் முத்துநகைக்கு நேரம் கிட்டிடவில்லை. அடுத்த நாள் ஜூனோவுடன் அகஸ்டசைச் சந்தித்த பொழுது கல்லணைச் சின்னம் பற்றி அவரிடம் பேச்சினை எடுக்குமாறு அவளையே தூண்டிவிட்டாள் முத்துநகை. கரிகாலனிடம் பெருமதிப்பு வைத்திருந்த அகஸ்டசும் அட்டியேதும் சொல்லிடவில்லை. ...நானே எவ்வாறோ என் கையில் வந்து சிக்கிவிட்ட கல்லணைச் சின்னத்தினைக் கரிகாலனிடம் யார் மூலம் சேர்ப்பிப்பது என்று சிந்தித்துக் கொண்டிருந்தேன். செழியன் மூலமே அனுப்பிடலாம் என்றும் பின்னர் முடிவு செய்தேன். ஆனால் இங்கு புகைந்துவிட்ட பல்வேறு சிக்கல்களின் காரணமாகத் தூதுவரிடம் அதைப்பற்றிக் கலைந்துரையாடிட இயலாமற் போயிற்று. இப்போது நம் நம்பிக்கைக்குரிய இந்தப் பெண்ணிடமே அதனைக் கொடுத்தனுப்பினால் போகிறது!" என்று உடனே இசைவினை அளித்துவிட்டார் ரோமாபுரி ஆட்சித் தலைவர். இவ்வாறாகக் கல்லணைச் சின்னத்தின் கதையினை முத்துநகை கூறி முடிக்கவும் செழியன் எங்கோ ஓர் விந்தையான உலகிலே தான் சஞ்சரிப்பதாகவே உணர்ந்திட்டான். தன்எதிரே மின்னிப் பளிச்சிடும் அந்தப் பசும்பொன் பரிசுப் பொருளையே இமை கொட்டாமல் பார்த்து மகிழ்ந்திட்டான். "என்னதான் நானும் பற்றுதல் உள்ளவன்தான் என்றாலும், கரிகாலரின் ஏக்கத்தினை உன் ஒருத்தியால் தான் தீர்த்து வைத்திட முடியும் என்பதையே சூழ்நிலைகள் மெய்ப்பித்துள்ளன பார்த்தாயா?" என்று தன் உடன் பிறவாத் தங்கையினைப் பெருமிதத்தோடு நோக்கினான் நம் ரோமாபுரிப் பாண்டியன். திடீரென்று அவனுக்கு ஓர் அச்சம் கலந்த ஐயப்பாடு தோன்றிவிட்டது. "ஆமாம் முத்துநகை. நம்முடைய இளவரசரோ தாமரையின்மீது மோகம் கொண்டு திரிகிறார் என்று கூறினாய். இவளோ அவரைக் காதலிக்கவில்லை; இவள் இப்படித் தன்னைக் காதலிக்காமல் என்னைக்