உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது கலைஞரின் சட்டமன்ற உரைகள் 1.pdf/431

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

430

மானியம், துணை மானியம், நிதி ஒதுக்கீடுகள் மீது


பாதிக்கப்படாத அளவிற்கு வேண்டிய உத்தரவுகள் அரசாங்கத் தால் வெளியிடப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டால் நிவாரணங்களைத் தேட வேண்டுமென்பதிலே முனைப்புள்ளது இந்த அரசு என்பதை நான் மீண்டும் மீண்டும் வலியுறுத்திக்கூறி- எந்தக் குற்றச்சாட்டாக இருந்தாலும் உடனடியாக அரசாங்கம் அக்னி குன்டத்திலே மூழ்கி எழுந்து வெளியே வரவேண்டுமென்று நண்பர் காளிமுத்து அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். சில நேரங்களிலே அக்னி குண்டத்திலே மூழ்கு என்று சொல்வது, நந்தனார் காலத்திலிருந்தே அக்னி குண்டத்திலே மூழ்கு என்று சொல்வது வழக்கமாக இருக்கிறது. ஏதோ அக்னி குண்டத்திலே மூழ்கிய நந்தனார் தன்னுடைய ஜாதி உணர்ச்சியிலிருந்து அல்லது கீழ் ஜாதி என்ற நிலையிலிருந்து மாறி பெரிய ஜாதியாக மாறினார் என்கின்ற வகையிலே ஒரு கீழ்ச்சாதிக்காரர் நேரடியாக ஆண்டவனைக் காண ஆலயத்திற்குள் செல்லக்கூடாது, கர்ப்பக் கிரகத்திற்குள் செல்லக்கூடாது என்ற காரணத்திற்காக அக்னி குண்டத்திலே மூழ்கி பெரிய ஜாதிக்காரர் ஆனாரா அல்லது அதிலேயே மூழ்கி சாம்பலாகிவிட்டாரா என்பது ஆராயப்பட வேண்டிய புராணக்கதை.

ஆனால், நான் சொல்வது, காளிமுத்து அவர்கள் சொன்ன அக்னிப் பரீட்சையை நாம் ஒருவருக்கொருவர் செய்துகொள்ளவேண்டிய இடம் சட்டப்பேரவைதான், சட்ட மன்றம்தான். இதை விசாரிப்பதற்கு வேறு பெரிய இடம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் அடிக்கடி சொல்கிறேன், மாநில அரசு தவறு செய்தால் மத்தியிலே ஒரு குழு போட்டு விசாரிக்க வேண்டுமென்கிறார்கள். மத்தியில் இருக்கிற அமைச்சர்கள் தவறு செய்தால் அதற்கு விசாரிக்கப்படவேண்டிய இடம் நாடாளுமன்றம் என்று சொல்லப்படுகிறது. அதை விசாரிக்க நாடாளுமன்றத்திற்கு உரிமை இருக்கிறது என்று சொன்னால் இங்கே தவறுகளை விசாரிக்க சட்டப் பேரவைக்குத்தான் உரிமை உண்டு