ພ
12
காணும்
நாகரிக மயக்கத்தில் கண்மூடி இருந்த நகர்வாழ் மக்களும் நாட்டுப்புறக் கலைகளை விரும்பிக் பக்குவநிலை அடைந்து வருவதைக் காணலாம். கலைகள் மங்கி மறைந்து விடக்கூடாது என்ற எண்ணம் இன்றைய கால கட்டத்தில் அனை வருக்கும் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் நாட்டுப்புறக் கலைகள் பற்றிய விழிப்புணர்ச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள் ளதைக் காணலாம்.. தூர்ந்து போன ஊற்றுக்கண்களைத் துலக் கியதும் உள்ளே அடைபட்டுத் தங்கிய நீர் விரைவெடுத்துப் பாய்வது போல் இதுவரை நாகரிக உலகால் ஒதுக்கப்பட்ட நாட்டுப்புறக் கலைகள் இக்காலத்தில் ஏற்பட்டுள்ள புத்துணர் வின் எழுச்சியால் பழமை துலங்கிப் புதுமை மூடி அனைத்து மக்களின் ஆவலைத் தூண்டும் பொலிவுடன் அரங்கமேறிக் களிப்பை மூட்டுகிறது
மக்களின் பண்பாட்டு உயர்வினைக் காலங்காலமாகத் தாங்கி வரும் நாட்டுப்புறக் கலைகளை நலிய விடக்கூடாது என்று அரசும் ஆவல் கொள்கிறது. தூரத்தில் ஒதுங்கி இருந்த கலை களை அன்புக் கரம் நீட்டி அழைத்து நகர அரங்குகளில் கொலு வேற்றி நாகரிக மக்களையும் நாட்டுப் புறக் கலைகளை விரும்பி ஏற்கும்படிச் செய்கிறது. மதிப்பின்றி குப்பை மேட்டுக் குன்றி மணிகளாக இருந்த நாட்டுப்புறக் கலைஞர்களைக் கலைமாமணி களாக்கி இன்று தமிழ்நாட்டு அரசு பாராட்டுவது குறிப்பிடத் தகும் கலைச்சேவையாகும். மங்கிய நிலையிலிருந்த நாட்டுப் புறக் கலைகள் மதிப்புடன் தலை தூக்கி எழுகின்றன. சோர் வுடன் காணப்பெற்ற கலைஞர்கள் சீருடன் திகழ்கிறார்கள். சமுதாய வீதியில் அவர்கள் கலைநடம் பயில விரும்பி வருகி றார்கள். நாட்டுப்புறக் கலைகள் நம்பிக்கை ஒளிகண்டு முன்
னேற்றப் பாதையில் விரைநடையிடத் தொடங்கிவிட்டன. தமிழ் நாட்டில் அரசு சார்பில் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம், தமிழக அரசு மக்கள் தொடர்பு செய்தித்துறை, சென்னை அருங்காட்சியகம் ஆகியவை நாட்டுப் புறக்கலைகளுக்கு உயர் வூட்டும் அரிய பணியை ஆவலுடன் செய்து கொண்டு வருகின்றன.
ஆராய்ச்சித் துறையிலும் நாட்டுப் புறக்கலைக்கு இன்று உயரிய இடம் தரப்பெற்றுள்ளது. முன்பு மேனாட்டு அறிஞர் சிலரே நாட்டுப்புறக் கலைகள் பற்றிய ஆய்வு மேற்கொண்டு ஊர் ஊராகச் சென்றனர். ஆனால் இன்று தமிழ் நாட்டு ஆய்வு அறிஞர் பலர் கலையாராச்சியில் முழு மூச்சாக ஈடுபட்டு தங்கள்