உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




14

சிறக்க நாட்டுப்புறக் கலைகள் உதவியுள்ளனவா என்பதையும் அறியலாம். முழுமையாகவும் உண்மையாகவும் பல கருத்துக்களை உணர வேண்டுமானால் கலைகளின் நோக்கத்தை நன்றாகப் புரிய வேண்டும். கலைகளின் தோற்றம், கருத்து ஆகியவற்றைச் சரியாக அறிந்து உணர்ந்தால்தான் நோக்கத்தை உறுதியாக அறிய இயலும்.

கலைகள் தோன்றி வளரும் காலகட்டத்தில் மக்களின் வாழ்க்கைநிலை, அறிவுநிலை, மனநிலை ஆகியவை எவ்வாறு இருந்தன என்பதை நன்றாக அறியவேண்டும். இயற்கையோடு இணைந்த மனதின் சமயக் கட்டுக்குள் தன்னைப் பிணைத்து கலையார்வத்துடன் பலவிதமான கலைகளை வெவ்வேறு விதமான நோக்கங்களுடன் உருவாக்கி இருக்கக் கூடும்.

கலை

வாழ்க்கைச் சூழலும் வாய்ப்பு வசதிகளும் மனிதனின் முகிழ்ப்புக்கு எந்த அளவுக்கு துணை நின்றுள்ளன என்பதையும் காண முயலலாம். அறிவுடன்பட்டும் அறிவுக்கு அப்பால் கற்பனை உலகில் நுழைந்தும் கலைகளுக்கு உருவாக்கம் கொடுத் திருக்கலாம். அவற்றுக்குத் தக்கவாறு கலைநோக்கம் மாறுவது இயல்பு.

இன்பத்ன

இன்பத்தை அடிப்படை நோக்கமாகக் கொண்டு கலைகள் முதன்முதலில் தோன்றியிருக்க வேண்டும் என்று கூறுவது பொருத்தமாக அமையும். சமய உணர்வு. அச்சவுணர்வு, நோய் தடுப்பு, பேயோட்டல், றமை காட்டல், வலிமை பெருக்கல், பொழுது போக்கு என்று பலவிதமாகக் கலைகளின் நோக்கத் தைப் பெருக்கிக் கொண்டே போகலாம். நன்றிக் கடன், வீர வணக்கம், முன்னோர் நினைவு போன்ற பலவற்றைக் கொண்டாட விழாக்கள் அமைத்து கலைநிகழ்ச்சிகளைப் பல விதமாக நடத்தி இருக்கலாம்- விழாவின் நோக்கம் சுவையாக நிறைவேற கலைகளை அதற்குத் தக்கவாறு அமைத்திருக்கக் கூடும். ஆடல், பாடல் போன்ற பலவிதமான திறமைகளைப் பிறர் விரும்பி ஏற்கும் முறையில் சில கலைகளை மனிதன் உருவாக்கி இருக்கலாம்.

(உணர்ச்சி, எண்ணம், கருத்து, வாழ்க்கை முறை, பண்பாடு

போன்றவற்றில் வேறுபாடுடைய பல இனங்களாகவும் குழுக் களாகவும் வாழ்ந்து வந்த மனிதன் தனக்குரியவற்றைத் தகுந்த முறையில் இனிமையாகப் புலப்படுத்த விரும்பும்போது விதமான கலைகள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக உருவாகி

பல