உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




23

ஊட்டப்படுகிறது. சில கலைகள் அதையே முக்கிய நோக்க

மாகக் கொண்டு

அவற்றைச் சமூக சீரமைப்புக் கலைகநடைபெறுகின்றன. என்று அழைக்கலாம். தமிழ் மக்கள் பெரும்பாலான நாட்டுப்புறக்கலைகளில் சமூக மேம்பாட்டுக் கருத்துக்களைப் புசத்திவிடுவதினால் அதற்கே உரிய தனிக் கலைகள் மிகவும் அருகியே காணப்படுகின்றன.

சமயக் கலைகள்

மனித வாழ்வு சிக்கல்களும் சீர்கேடுகளும் நிறைந்தது. இறப்பு தவிர்க்க முடியாத நிகழ்ச்சியாக உள்ளது. அச்ச உணர்வு மனிதனை ஆட்கொண்டு அசைக்கும் தன்மை உடையது பலவிதமான இயற்கை நிகழ்ச்சிகள் மனித ஆற்றலுக்குக் கட்டுப்படாது மிகவும் கொடுமையாக நடந்து விடுகின்றன. இவற்றைத் தவிர்க்க இயலாது மனிதன் தவிக்கும் போது தன்னை விடவும் மேலாற்றல் கொண்ட ஒரு பேராற்றலைப் பற்றிச் சிந்திக்கிறான். அது தன்னைப் பேராபத்திலிருந்து காப்பாற்றும் என்ற நம்பிக்கை கொள்கிறான். இயற்கை நிகழ்ச்சிகள் அனைத்தும் அந்தப் பேராற்றலுக்குக் கட்டுப்பட்டவை என்பதை முடிவாகக் கொள்கிறான். அதற்கு, இறையாற்றல் பெயரைக் கொடுத்து பணிந்து வணங்க விரும்புகிறான்.

யகா

என்ற

அறிவு வளர வளரச் சில புதுக் கருத்துகள் அவனுக்குத் தோன்றுகின்றன. தன்னுடைய தீய செயல்களே கொடிய இயற்கை நிகழ்ச்சிகளுக்குக் காரணம் என்று நினைக்கிறான். ஆகையினால் நன்மைகளைச் செய்து தீமைகளைத் தடுக்க வேண்டுமெனக் கருதிப் பல அறநெறிகளை முறையாக வகுக்கத் தலைப்படுகிறான். அவையே காலவோட்டத்தில் சமயக் கோட் பாடுகளாக மலர்கின்றன. பல அறிஞர்கள் தங்கள் ஞான வுணர்வில் தோன்றியவற்றைத் திரட்டி வாழ்க்கை நெறிமுறை களாக வகுத்துத் தர முற்படுகின்றனர். அவையே பலவிதமான சமயக் கொள்கைகள் தோன்றக் காரணங்களாக அமைகின்றன. ஒரே வகையான நெறிமுறைகளைப் பின்பற்றுகிறவர்கள் அனைவரும் இணைந்து தங்களை ஒரு குறிப்பிட்ட சமயத்தினர் என்று கூறிக்கொள்ளும் நிலை ஏற்படுகிறது.

உருவக முறையில் தெய்வங்கள் தோற்றம் பெறுகின்ற

கற்பனையாக இருந்தவற்றுக்குத் தகுந்தவாறு

அமைக்க மனிதன் முயன்றதின் பயனாகப் பலவிதமான தெய்வ உருவங்கள் அமைக்கப்படுகின்றன. அச்சம் தரும் இயற்கை