உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக நாட்டுப்புறக் கலைகள் 01.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




74

பல

இடங்களில்

காவடி

இன்றைய வளர்ச்சி நிலையில் யாட்டம் தொழில் முறையில் நடத்தப்படுகிறது பக்திப் பரவசம் இதில் இருப்பதில்லை. ஆனால் கலைத்திறமும் ஆடல் நுட்பமும் மிகுதியாக இருக்கும். கலைச்சிறப்பு காட்டும் பலவித மான உத்திகளைக் கையாண்டு கலைஞர் மக்களைக் கவர்ந்து இழுப்பர். முதலில் காவடியைத் தோளில் தாங்கி மெதுவாக ஆடத்தொடங்குவர் இசையின் வேகம் மேலோங்குவதற்குத் தக்கவாறு ஆட்டத்தின் விறுவிறுப்பும் வேகமும் கூடிக்கொண்டே போகும். தோளிலிருக்கும் காவடியை கழுத்துக்கும், முதுகுக்கும் கைபிடிக்காமல் மாற்றி மாற்றி ஆடுவர் சில சமயம் காவடி யைத் தலை உச்சி, நெற்றி, மூக்கு நுனி ஆகியவற்றில் நிறுத்திக் காட்டுவர். முன்னும் பின்னும் சுழலச் செய்வர். உடம்பின் பல பகுதிகளில் காவடியை ஊர்ந்து வரச் செய்து தங்களுடைய திறமையைப் புலப்படுத்திக் காட்டுவர். உடற்பகுதியில் காவடி ஒட்டிச் சுழல்வது காந்தக் கவர்ச்சியில் ஒட்டி அசையும் இரும்பின் தோற்றம் போல் இருக்கும். கலைஞர் உடலை வளைத்தும், தரையில் குனிந்தும், மேலே எழும்பியும் ஆடுவது அவரது திறமைக்கு நல்ல சான்றுகளாக அமையும். அவர்கள் காலில் சதங்கை கட்டியிருப்பர். ஆடும் போது அவை அசைந்து இனிய தாள ஒலியை எழுப்பும். காவடியைப் பிடிக்காது கை, கால்களை அசைத்து ஆடுவது கலைக்காட்சியாக இருக்கும்.

காவுதடியே 'காவடியாகி' இருக்க வேண்டும். 'காவுதல்’ என்பது கட்டித் தொங்கவிட்டுச் சுமத்தல் என்ற பொருளைத் தருவதாகும். கம்பின் ஒரு இருமுனைகளிலும் தண்ணீர் சேத்தும் தோண்டிகளைக் கட்டித் தொங்க விட்டிருப்பதைப் பல இடங்களில் காணலாம். அதனைக் 'காவட்டுத் தோண்டி என்றே கூறுவர். இதே போன்று காவடித் தண்டின் மூலம் இருமுனைப் பாரம் சுமக்கும் வழக்கத்தை ஆந்திரம், கர்னாடகம், ஒரிசா, தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் பெருவாரியாகக் காணலாம். பல இடங்களில் கலையாக வளராத காவடிச் சுமை தாங்கி தமிழ் நாட்டில் மிகச்சிறந்த ஆடல் கலையாக வளர்ந்து பொலிந்துள்ளது சிந்திக்க வேண்டிய செய்தியாகும்.

>

முருகன் கோயில்கள் பெரும்பாலும் மலைகள் மீது இருப் பதை அறிவோம். அங்கு இறை வழிபாட்டுக்குச் செல்வோர் பலவகையான படையல் பொருட்களையும் தங்களுக்கு வேண்டிய வற்றையும் சுமந்து செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது.