பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
22

சில மாதங்களாக அவ்வட்டாரத்தில் நிகழ்ந்த சம்பவங்கைளப் பற்றிப் பலர் பலவிதமாகப் பேசிக் கொண்டாலும், எல்லோரும் உணரத் தவறாத விசித்திர ஒற்றுமைகள் சில இருந்தன. அதுவரை ரத்த பலிக்கு இலக்கான எட்டுப் பேர்களும் பெண்கள். குறிப்பிடத்தக்க அழகு பெற்றவர்கள். இளமை மிடுக்கும், ரத்த புஷ்டியும், ஆரோக்கியத் தோற்றமும் பெற்றிருக்க ‘டொமெட்டோ பிராண்டு’ உருப்படிகள் அவர்கள். ஆகவே, இந்நிழ்ச்சிகளின் அடிப்படைக் காரணங்கள் பல இருக்கலாம் என்று எண்ணினாா்கள் ஜனங்கள். காமவெறி பிடித்த கயவர்களின் வேலையாகத்தானிருக்கும் என்று நினைத்தார்கள். அப்படியிருந்தாலும் எல்லாப் பெண்களும் ரத்தமிழந்து உயிரைப் பறிகொடுக்க வேண்டிய அவசியம் தானென்ன என்ற சந்தேகமும் அவர்களுக்கு எழுந்தது. அவர்கள் மனதைச் சமாதானப்படுத்திக் கொள்வதற்காக உதிர்த்த அபிப்பிராயம் இதுதான்: ‘எல்லாம் ஒரே குழப்பமாக இருக்கிறது! அவ்வளவுதான்.' அவர்களது குழப்பமும் திகைப்பும் அதிகரித்தன குமாரி பவானி ஒலிபரப்பிய உண்மைகளை அறிந்ததும். குமாரி பிழைத்து விட்டாள். வைத்திய சாதனங்கள் மிக முன்னேறி விட்ட இந்தக் காலத்திலே பவானி பிழைத்தது பெரிய அதிசயமல்ல. அவள் எண்ணத் தெளிவு பெற்று அதிவித்தவையே பெரும் அதிசயங்களாக விளங்கின. அவள் சொன்னுள் : “பள்ளிக்கூட விழா முடிந்து நானும் என் சிநேகிதிகளும் உல்லாசமாகப் பேசிக்கொண்டே நடந்து வந்தோமா? மற்றவர்கள் வேறு பாதையாகப் பிரிய நேர்ந்ததும் நான்