உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

151

இந்த நிதிநிலை அறிக்கையைப்பற்றி நான் வெகுவான விவரங்களை நீங்கள் சுட்டிக்காட்டிய அடிப்படையிலே ஆராய்வதற்கு முன்பு, தொடர்ந்து நாம் வலியுறுத்தி வருகின்ற மாநில உரிமைகள், மாநில அதிகாரங்கள் இவைகளைச் சுட்டிக்காட்ட வேண்டியது என்னுடைய கடமையாகும்.

நம்முடைய லத்தீப் அவர்கள் பேசும் பொழுதும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினுடைய சார்பிலே வீரையன் அவர்கள் நேற்று உரையாற்றிய பொழுதும், அதைப் போலவே நம்முடைய பி.எச். பாண்டியன் அவர்கள் உரையாற்றிய பொழுதும், பூவராகன் அவர்கள் உரையாற்றிய பொழுதும், தமிழ்நாடு ஜனதாக் கட்சியினுடைய தலைவர் விஜயராகவன் அவர்கள் இங்கே உரையாற்றிய பொழுதும் மாநில உரிமைகள் எந்த அளவிற்கு மத்திய அரசினால் பறிக்கப்படுகின்றன, அவைகளையெல்லாம் நாம் பெறுவதற்குத் தொடர்ந்து குரல் கொடுத்திருக்க வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டினார்கள். இன்று நேற்றல்ல, மாநில உரிமைகள் வேண்டும்; இன்னும் சொல்லப்போனால் மாநில சுயாட்சி எல்லா மாநிலங்களுக்கும் அமையப்பெறவேண்டுமென்ற கருத்தை நாம் அல்ல, பண்டித ஜவஹர்லால் நேரு அவர்களேகூட இந்தியா சுதந்திரம் பெறுகிற அந்தக் காலக்கட்டத்தில் அழுத்தந்திருத்தமாக எடுத்துரைத்து இருக்கிறார்கள். அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி 1945ஆம் ஆண்டு இந்திய மக்கள் முன்னால் வைத்த தேர்தல் பிரகடனத்தில் இந்தியக் கூட்டாட்சி என்பது அதன் பல்வேறு பகுதிகளிலும் விரிந்து இணையும் ஒன்றியமாக இருக்க வேண்டும். அந்தப் பகுதிகளுக்கு, அதாவது மாநிலங்களுக்கு, அதிகபட்சம் சுதந்திரம் அளிப்பதற்காக எல்லோருக்கும் பொதுவான, முக்கிய அதிகாரங்கள் கொண்ட குறைந்தபட்ச அதிகாரங்களைக் கூட்டாட்சி அரசிற்கும் தேவைப்படும் பகுதிகள் அதாவது மாநிலங்கள் விரும்பினால் ஏற்கும் பொதுவான, அதிகாரங்கள் கொண்ட பொதுப் பட்டியலும் இருக்கலாம்.

அதைத் தொடர்ந்து 1947ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையில் பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் முன்மொழிந்த தீர்மானத்தில் இப்போது பிரிட்டிஷ் இந்தியாவில் உள்ள நிலப்பகுதிகளும், இந்திய சமஸ்தானங்களில் உள்ள