உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

31

 திக்கும் ஆயிரம் ரூபாய் கூடக் கொடுத்து அனுப்புவேன். இவர்களது பலவீனத்தால் எனக்குத்தான் கால கஷ்டம்...' ருத்ரமூர்த்திக்கு ஆராய்ச்சி மோகத்தினால் பைத்தியம் பிடித்துள்ளது என்றுதான் மற்றவர்கள் நம்பினார்கள் கடைசிவரை அவர் விடாப்பிடியாக வாதாடத் தவறவில்லை. யுத்தமுறை ஆராய்ச்சிகளுக்காகத் திறமைசாலிகள் ஆயிரக்கணக்கான மக்களைக் கொல்வதை உங்கள் சட்டமும் சமுதாய முறைகளும் பாபம் என்று கொள்ளவில்லையே! விஞ்ஞான அறிவு அபிவிருத்திக்காகவும், உடற்கூறு சாஸ் திாப் பரிசோதனைகளுக்காகவும் எண்ணிலா மிருகங்கள் கொல்லப்படுவதைச் சட்டம் அங்கீகரிக்கிறதே. எனது பயிர்ச் சோதனையில் நான் வெற்றிகரமாக முன்னேறும் போது நீங்கள் ஏன் தடையாகக் கிளம்புகிறீர்கள்?' என்று சவாலிட்டார். 'இவன் மனித இதயம் படைத்தவனல்ல. பேய் மனம் பெற்ற அரக்கன். இவனே உயிருடன் விட்டு வைப்பது தவறு என்றுதான் எல்லோரும் எண்ணினார்கள். அதற்கு வேண்டிய நியாயபூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு முடிவிலே தூக்கிலே தொங்க விடப்பட்டான் வக்கிரபுத்தி படைத்த அந்த அதமன். - அவனுக்குக் கையாளாக யிருந்து ஒத்துழைத்த பாபத்திற்காக அவனது வேலைக்காரனுக்கு ஜன்ம தண்டனை அளிக் கப்பட்டது. பாதுகாப்பான ஒரு சிறையிலே தள்ளப் பட்டான் அவன். ருத்ரமூர்த்தியின் ஆராய்ச்சிச் செல்வங்களான செடிகள் தாமாகவே கருகிப் போயின. தனிரகப் போஷாக்கு பெறும் குரோட்டன்ஸ் செடிகள் வேறுவித வளர்ப்பு முறைகளுக்குத் திடீரென இலக்காகும் போது, மாற்றத்தைத் தாங்கி நிற்கும் திராணியற்றுச் செத்துப் போவதில்லையா, அதே கணக்குத் தான். மனித ரத்தத்தினால் வளர்ந்த பரம்பரையில் தோன்றிய இளஞ்செடிகளுக்குத்