கலைஞரின் சட்டமன்ற உரைகள்
197
நிறைவேற்றுவதற்கும் பயன்படக்கூடிய வகையிலே அமைந்திருக்கின்றன என்பதை நான் மகிழ்ச்சியோடு எண்ணிப் பாக்கிறேன். சில நேரங்களிலே விவாதத்திலே வெப்பம் தோன்றினாலும்கூட அதற்கு அதற்கு மாறாக ஒளி தோன்றவும் தவறவில்லை. அப்படிப்பட்ட ஒளிக்கீற்றுகள் இந்த விவாதத்தின் மூலமாக எனக்கும் என் தலைமையில் இயங்குகின்ற இந்த அரசிற்கும் கிடைத்திருக்கிறது என்பதை எண்ணி நான் பெருமையடைகின்றேன்.
எதிர்க்கட்சித் தலைவர் இங்கே பல செய்திகளை, இந்த மாமன்றத்திலே நீண்ட நெடுநாட்களாக விவாதிக்கப்பட்டு அதற்கு விடையளிக்கப்பட்டு முடிந்து போன பல செய்திகளை எல்லாம்கூட, மீண்டும் அவற்றிற்குப் புத்துயிர் ஊட்டுகின்ற வகையிலே இன்றைக்கு எடுத்துக் கூறியிருக்கின்றார்கள். நான், அவற்றிற்கு எல்லாம் என்னுடைய நேரத்தைச் செலவிட விரும்பவில்லை. சில ஆக்கப்பூர்வமான கருத்துக்களுக்கு, இந்த அரசை நடத்துவதற்கு இந்த அரசின் சார்பாக மக்களுக்கு, தொழிலாளர்களுக்கு, விவசாயிகளுக்கு, நெசவாளர்களுக்கு மற்றும் பல்வேறு பிரிவு மக்களுக்கு என்னென்ன காரியங்கள் செய்யப்படவேண்டும், எத்தகைய உரிமைகள் வழங்கப்பட வேண்டும், எத்தகைய சலுகைகள் அளிக்கப்படவேண்டும் என்பன போன்ற அந்தக் கருத்துக்களை எல்லாம் ஏற்று அவ்வழி நடத்திட இந்த மாமன்றத்தில் எடுத்துச் சொல்லப்பட்ட அந்தக் கருத்துக்கள் எங்களுக்குத் துணையாக நிற்கும் என்று நான் நம்புகிறேன்
இந்த விவாதத்தை முதன் முதலாகத் தொடங்கி வைத்த நம்முடைய நண்பர் திரு. உகம்சந்த் அவர்கள் இது ஒரு கணக்குப்பிள்ளை எழுதுகிற கணக்கு வாத்தியார் போடுகிற கணக்கு மாதிரி இருக்கிறது என்று சொன்னார். நல்லவேளை என்னை அவர் கணக்குத் கணக்குத் தெரியாத மாணவன் என்று சொல்லாமல் கணக்கு வாத்தியார் என்று சொன்னதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். வாத்தியார் என்று சொன்னால் அவருடைய தலைவரையும் கூட குறிப்பிடும். அந்த வகையில் அவர் என்னை அவருடைய தலைவரையும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டு கணக்கு வாத்தியார் என்று பாராட்டியதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். கணக்கு