உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

233

விதிமுறைகளுக்கு விரோதமானது என்றும் புறம்பானது என்றும் எதேச்சாதிகாரமாக விருப்பு வெறுப்புகளை அடிப்படையாகக் கொண்டு கட்சிக்காரர்களுக்கு சலுகை கொடுக்கும் விதத்திலும் தேர்வு முறை நடைபெற்றது என்றும் ஒரு சிலர் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றனர். உச்ச நீதி மன்றம் இந்த வழக்கை விசாரிக்க என்று தேதி குறிப்பிட்டது. நாமினேஷன் முறையிலே கட்சிக்காரர்களுக்குக் கொடுக்கிறார்கள் என்று சிலர் சுப்ரீம் கோர்ட்டிற்குச் சென்றார்கள். 15.7.1986ல் இந்த வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் தேதி குறித்தது...

15.7.1986

மாண்புமிகு பேரவைத் தலைவர்: பேரவையின் ஒப்புதலோடு அவையின் அலுவல் நேரம் நீட்டிக்கப்படுகிறது.

மாண்புமிகு கலைஞர் மு. கருணாநிதி: இந்த வழக்கில் சட்டப்படி குற்றச்சாட்டுகள் வலுவானதாகவும், மறுக்க முடியாததாகவும் இருந்த காரணத்தை அரசு மனத்தில் கொண்டு, இந்த முறை நீடித்தால் உச்ச நீதிமன்றத்தின் விமர்சனத்திற்கு உள்ளாகவேண்டிவரும், அதனால் பல விளைவுகளுக்கும் ஆளாக நேரிடும் என்று எண்ணி, எந்தத் தேதியில் உச்ச நீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்க தேதி குறித்ததோ அந்தத் தேதி முதல் சில்லறை வியாபாரத்தை நாமினேஷன் முறையிலிருந்து திரும்பப் பெற்று மறுபடியும் ஏலம் மற்றும் டெண்டர் முறையிலேயே கொண்டுவர முடிவு செய்து, அதற்கான அவசரச் சட்டத்தை அன்றைக்கிருந்த அரசு பிறப்பித்தது. இந்தமுறை 31.12.1986 வரை, அதாவது இறுதியாக கள் மற்றும் சாராயக் கடைகளை மூடுகிற வரையிலும் இருந்து வந்த முறையாகும். அப்போது 14.3.1983 அன்று சட்டப் பேரவை எதிர்க்கட்சியிலே இருந்த நான் சாராய உற்பத்தியையும் விநியோகத்தையும் அரசோ அல்லது கூட்டுறவுத் துறை நிறுவனமோ ஏன் மேற்கொள்ளக் கூடாது என்று கேட்ட கேள்வியை அடிப்படையாகக் கொண்டு அன்றைக்கு இருந்த அரசு ஒரு ஃபைலையே ஆரம்பித்தது, ஒரு கோப்பையே ஆரம்பித்தது. இப்போதுதான் தெரியும் எனக்கு, என்னுடைய பேச்சை வைத்து அரசு அப்போது ஒரு கோப்பையே ஆரம்பித்திருக்கிறது என்று. அதில் எதிர்க்கட்சித் தலைவருடைய வேண்டுகோளை தீவிரமாகப் பரிசீலித்து அரசு மொத்த வியாபாரத்தை மட்டும் டாஸ்மாக்கிடம்

O