உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

263

மாணவ, மாணவியருக்குக் கூடுதல் சலுகைக் கிடைக்கும். இதனால் அரசுக்கு ஆண்டு ஒன்றுக்கு ஏற்படும் கூடுதல் செலவு 1.5 கோடியாக அமையும்.

மாணவர்களுக்கு மருத்துவ வசதி. தமிழ்நாட்டில் பள்ளி மாணவ, மாணவியர் மருத்துவ வசதித் திட்டம் 'ஸ்கூல் ஹெல்த் புரோகிராம் 153 தொடக்க சுகாதார நிலையங் களிலும், 40 நகராட்சிகளிலும் செயல்படுத்தப்படுகிறது. ஒரு தொடக்க சுகாதார நிலையத்தில் 2 ஆயிரம் மாணவ, மாணவியர், ஒரு நகராட்சியில் 10 ஆயிரம் மாணவ, மாணவியர், என்ற அடிப்படையில் 7.6 இலட்சம் மாணவ, மாணிவியர்களுக்கு மருத்துவ ஆய்வு நடத்தப்படுகிறது. தற்போது தொடக்க சுகாதார நிலையம் 30 ஆயிரம் ஜனத்தொகைக்கு ஒன்று என்று ஏற்படுத்தப்பட்டு உள்ளதால் மாநிலம் முழுவதும் புதிய சுகாதார நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழ்நிலையில் பள்ளிக்கூடங் களில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர் களுக்கும் ஆண்டு மருத்துவ ஆய்வு மற்றும் சிகிச்சை செய்வதற்காக ஒரு திட்டம் செயல்படுத்தப்படும். இத் திட்டத்தால், 1.2 கோடிக்கு மேற்பட்டமாணவ மாணவியர் பயன் பெறுவார்கள். இதற்கு முதல் கட்டமாக 1 கோடி ரூபாய் சிறப்பு ஒதுக்கீடு செய்யப்படும்.

இன்னொரு மகிழ்ச்சிகரமான செய்தி. இந்த மாமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள திருவள்ளுவர் படம். இந்தப் படத்தை வரைந்த வேணுகோபால் சர்மா அவர்களுக்கு நான் தனிப்பட்ட முறையிலும், நான் சார்ந்துள்ள கழகத்தின் சார்பிலும், இந்த அரசின் சார்பிலும் அவர் மறைவதற்கு முன்பும், மறைந்த பிறகும் கூட பல உதவிகள் செய்யப்பட்டு இருக்கின்றன. அவர் வரைந்த அந்தப் படத்தை அரசே எடுத்து, உரிமை வைத்துக்கொள்ள வேண்டும் என்று அவருடைய பிள்ளைகள் அவர் மறைந்த பிறகு எங்களுக்கு எழுதினார்கள். அது குறித்து அவர்களோடு அதிகாரிகளை விட்டுப் பேசச் சொன்னேன். அவர்கள் தந்துள்ள கடிதத்தை இங்கே படிக்க விரும்புகிறேன். "ஐயா, ஓவியர் அமரர் வேணுகோபால் சர்மா அவர்களின் குடும்பத்தாராகிய எங்கள்