கலைஞரின் சட்டமன்ற உரைகள்
297
என்று நிதிநிலை அறிக்கையிலே குறிப்பிட்டிருந்தேன் இதனால் வணிகர்களுக்கு உள்ள பணிப் பளு மற்றும் வரி விதிப்புப் படிவங்கள் குறைந்து, 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பயன் அடைவார்கள் என்றும் குறிப்பிட் டிருக்கின்றேன். எனவே, 100 கோடிக்கு மேலே ஆண்டு ஒன்றுக்கு மொத்த வியாபாரம் நடத்தும் நிறுவனங்களுக்கு கூடுதல் விற்பனை வரி வரி உண்டு. உண்டு. அஃதன்னியில்
ஒரு
சார்பில் பல ஏஜெண்டுகளைக் கொண்டு நிறுவனத்தின் சார்பில் பல நடத்தும் வியாபாரத்தில் 100 கோடிக்கு மேலே மொத்த விற்பனைக் கணக்கு வருமேயானால், அவர்களுக்கு கூடுதல் விற்பனை வரி விதிக்க அரசு பரசீலித்து வருகிறது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினுடைய மாண்புமிகு உறுப்பினர், சுப்பராயன் அவர்கள், திருப்பூர் பனியனுக்கு உள்ள பிரச்சினையைப் பற்றி வேண்டுகோள் வைத்தார்கள். இந்தப் பிரச்சினை குறித்து அரசாங்கம் மிகுந்த கவனத்தோடு பரிசீலித்தது. அதற்குள் வருத்தப்பட வேண்டாம். பரிசீலித்தது. ஒரு நிபந்தனையோடு ஒரு சலுகை. தமிழ்நாட்டிலிருந்து மற்ற மாநிலங்களுக்கு ஏற்றுமதியாகக்கூடிய பனியன்கள் மற்றும் பின்னலாடைகள் முழுவதும் தற்போது 4 சதவீதம் மைய விற்பனை வரிக்கு உட்பட்டதாகும். 'சென்டரல் சேல்ஸ் டாக்சிற்கு உட்பட்டதாகும். இதனை ஒரு சதவீதமாகக் குறைக்க அரசாங்கம் முன் வருவதற்கு சில நிபந்தனைகளை விதிக்கின்றது. இதற்கு சுப்பராயன் மகிழ்வார் என்று கருதுகிறேன். மகிழவேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இதற்குப் பின்வரும் நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அதாவது, ஏற்றுமதியாகும் மொத்த பொருள்களும் ‘பிரான்ஞ்ச் டிரான்ஸ்ஃபர்' அல்லது 'கன்சைன்மென்ட்' விற்பனையில் அனுப்பப்படாமல் முழுவதும் மைய விற்பனை வரிக்கு உட்படுத்தப்பட்டதாக அனுப்பப்பட வேண்டும்; சுப்பராயன் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டுமென்று சொன்னார். முழுமையாக நிறைவேற்ற முடியாவிட்டாலும், ஒரு சதவீத அளவிற்கு விதிக்கப்படலாம் என்று இந்த அரசு முடிவெடுத்துள்ளது. இதனால் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
அவர்கள்
முழுமையாக
வரி