358
நிதிநிலை அறிக்கை மீது
இப்படிப்பட்டவர்களை எல்லாம் நான் எப்படி நேசிப்பேன் என்பது உங்களுக்குத் தெரியும். இந்தக் கழகத்திலே இல்லாதவர்களாக இருந்தாலும் கூட - எனக்குக் கூட ஒரு வருத்தம் உண்டு. நாம் காமராஜரைப் பாராட்டுகிறோம், அவருடைய சிலைக்கு மாலை அணிவிக்கிறோம். ஆனால் அண்ணாவைப் பாராட்டி அண்ணாவின் பிறந்த நாளில் காங்கிரஸ்காரர்கள் யாராவது அண்ணாவுக்கு ஒரு மாலை அணிவிப்பது இல்லையே என்ற ஆதங்கம் எல்லாம்கூட எனக்கு உண்டு. ஆனால் அதை எல்லாம் நான் மறந்துவிட்டு ஒதுக்கி வைத்து விட்டு யார் இந்த நாட்டின் தலைவர்களோ, யார் வழிகாட்டிகளாக இருந்தார்களோ, யார் நமக்கு எல்லாம் ஊக்க உணர்வுகளுக்குத் தூண்டுதலாக இருந்தார்களோ அவர்களை எல்லாம் நாம் பாராட்டினால், அவர்களை எல்லாம் வாழ்த்தினால், அவர்கள் வழியில் எதிர்கால வழித் தோன்றல்கள் நடப்பார்கள் என்ற எண்ணத்தோடுதான் நான் அவர்களை எல்லாம் பாராட்டுகிறேன், போற்றுகிறேன்.
உங்களுக்குத் தெரியும், ருக்மணி லட்சுமிபதி, டாக்டர் ராமமூர்த்தி அவர்களுடைய மாமியார். முதன் முதலாக சட்டப்பேரவைக்கு தமிழ்நாட்டிலே வந்த பெண்மணி. விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர். அவர்கள் திராவிட இயக்கத்தினுடைய கொள்கைக்கு மாறுபட்ட - அந்தக் காலத்து திராவிட கழகத்துக் கொள்கைகள், இப்போது அல்ல மாறுபட்ட, ஒரு பெண்மணி அதுவும் உங்களுக்குத் தெரியும். உப்பு சத்தியாகிரகத்திலே சர்தார் வேதரத்தினம் பிள்ளையோடு சென்று கலந்து கொண்டவர்கள். ராஜாஜியினுடைய அணியிலே சென்றவர்கள். அவர்கள் மறைந்து பல நாட்கள் ஆகின்றது. அவருக்கு ஒரு சிலை வைக்கவேண்டும் என்று பெரும்பாடு பட்டு மார்ஷல் ரோடுக்கு அந்த அம்மையாருடைய பெயர் வைக்கவேண்டுமென்று என்னைக் கேட்டபோது ஒரு விழாவிலே அறிவித்து அந்த அம்மையாருடைய பெயர் அந்தச் சாலைக்கு வைக்கப்பட்டது. அதற்குப் பிறகு சிலை வைக்க பீடம் எல்லாம் தயார் ஆயிற்று. அதற்குள் ஆட்சி போய்விட்டது. பின்னர் வந்த அந்த ஆட்சியில் 5 ஆண்டுக் காலம் டாக்டர் ராமமூர்த்தி நடையாய் நடந்து பார்த்தார். புத்தகம் கூட எழுதிப் பார்த்தார். என்னை