உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/385

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

384

நிதிநிலை அறிக்கை மீது

அவர்கள் இங்கே பேசும்போது, வறுமைக்கோட்டிற்குக் கீழே இருக்கின்ற மக்களுடைய வேதனைகளையும், இந்த நேரத்திலே இவர்களுக்கெல்லாம் இவ்வளவு ஊதிய உயர்வு தருகிறோமே என்கின்ற ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள். வெளிப்படுத்திவிட்டு இன்னொன்றைச் சொன்னார்கள்.

சொல்லவில்லை’

இவ்வளவு ஊதியத்தைப் பெறுகின்ற அரசு அலுவலர்கள் ஒழுங்காகச் செம்மையாகப் பணியாற்ற வேண்டாமா, தவறு செய்கிறார்களே என்று கேட்டுவிட்டு மிக ஜாக்கிரதையாக 'நான் எல்லோரையும் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்கள். நான் அந்தக் கருத்தோடு ஒத்துப் போகிறேன். ஆனால் ஒன்று, திட்டங்களுக்குச் செலவு குறைவு. அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அதிகம் என்று யாரும் எண்ணிக் கொள்ளக்கூடாது. திட்டங்களும், அரசு ஊழியர்களும் சேர்ந்துதான் இருக்கிறார்கள்.

என்னுடைய வீட்டுக்கொல்லைப்புறத்திலே ஒரு கிணறு வெட்டுகிறேன் என்றால் அதற்காக நான் 10,000 ரூபாயைச் செலவழிக்கிறேன் என்றால், அந்த 10,000த்தைத் தூக்கிக் கொண்டு போய் கொல்லையிலே போட்டால் கிணறு வந்து விடாது. அந்தக் கிணறு தோண்டுவதற்கு ஆள், செங்கல்லை அடுக்குவதற்கு ஆள், அந்தச் செங்கல் அடுக்கப்பட்டு, கட்டி முடிக்கப்பட்டு கிணற்றிலே சகடை போடுவதற்கு ஆள், கயிறு வாங்க ஆள், அதிலே குடத்தைத் தொங்கவிட்டு தண்ணீர் எடுக்க ஆள் என்று இத்தனை ஆட்கள் வேண்டும். அவ்வளவு பேர்களுக்கும் சம்பளம் கொடுத்தால்தான் கிணற்றுக்குள்ளே இருக்கிற தண்ணீர் வெளியே வரும். எனவே, இந்த அரசு

ழியர்கள், அவர்களுக்குத் தரப்படுகின்ற ஊதியம் என்பது, ஒரு கிணறு தோண்டுவதற்கு நம்முடைய கொல்லையிலே நாம் முயற்சி எடுக்கும்போது, பணத்தைப் போட்டால் எப்படி கிணறு வந்துவிடாதோ, பணத்தை யார் யாருக்குப் பங்கிட்டுக் கொடுத்தால் கிணறு உருவாகுமோ, அதைப்போல அரசு ஊழியர்களுக்குத் தொகையைத் தருகிறோம். அதை, அவர்கள் சில நேரங்களிலே கொஞ்சம் அதிகமாகக் கேட்கிறார்கள். அது அவர்களுடைய உரிமை. மத்தியிலே உள்ள அரசு கொடுப்பதைப்போல எங்களுக்கும் கொடு, என்று ஒரு கோரிக்கையை வைத்து நீண்டநாள் போராடினார்கள்.