உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406

நிதிநிலை அறிக்கை மீது

தோன்றாத, உச்சரிக்காத அந்த வார்த்தைகளை தனக்கென்று, அவருக்கு மாத்திரமே Copy right என்கின்ற அளவிற்கு அந்த வார்த்தைகளை அவர் பயன்படுத்துவார். இதிலே ஒரு நியாயமான உண்மை என்னவென்றால், எனக்கோ அல்லது அவை முன்னவர் பேராசிரியருக்கோ, அவர் குறிப்பிடுவதைப் போல தொங்கு சதை எதுவும் கிடையாது. (சிரிப்பு). நாங்கள் ஏற்கெனவே இளைத்த உருவங்கள்.

இந்த அமைச்சரவையிலே உள்ள நாங்கள் தயாரித்த இந்த வரவு செலவுத் திட்டத்தில், கவர்ச்சித் திட்டங்கள் எல்லாம் தொங்கு சதை என்று அவர் குறிப்பிட்டது மாத்திரமல்ல, இன்னொன்றையும் சொன்னார். யாரோ சத்துணவு பற்றி குறிப்பிட்டபோதும், வேறு சில ஏழைகளுக்கு உணவு வழங்குதல் போன்ற செய்திகளைச் சொன்ன போதும் திரு. சுப்பராயன் அவர்கள் குறுக்கிட்டுச் சொன்னார்கள். அது என்ன காலையிலே சாப்பிட்டு அல்லது மாலையிலே சாப்பிட்டு மறுநாள் காலையிலே வெளியே வருவதுதானே என்று குறிப்பிட்டார்கள். விஞ்ஞான ரீதியாக எல்லாம் தெரிந்த சுப்பராயன் அவர்களுக்கு மாலையிலே சாப்பிடுகின்ற உணவோ அல்லது எதுவோ, அது உடலிலே ஊறி இரத்தமாக மாறி உடலுக்கு வலு அளிக்கிறது என்பதுகூடத் தெரியாமலா இருக்கும். நிச்சயமாகத் தெரியும். தெரிந்தாலும்கூட அன்றைக்கு என்னவோ கோபம், வீட்டிலேயிருந்து வரும்போதே கோபத்தோடே வந்திருக்கிறார். (சிரிப்பு). மனைவி மீது இருக்கிற கோபத்தை மகன் மீது காட்டுவதைப்போல என்மீது அல்லது நான் தயாரித்திருக்கிற பட்ஜெட் மீது அதைக் காட்டியிருக்கிறார். மற்றபடி அவர் பேசிய பேச்சுக்களிலே மிக ஆழ்ந்த, பொருளாதார தத்துவங்கள், சமுதாய நலன்களுக்காக கூறப்பட வேண்டிய கருத்துக்கள் மிக, மிக இருந்தன என்பதை நான் படித்துப் பார்த்துத் தெரிந்து கொண்டிருக்கின்றேன்.

இங்கே இன்றைக்கு வரவில்லை நம்முடைய நண்பர் உறுப்பினர் அழகிரி அவர்கள். அவரும் அவருடைய கட்சியினுடைய அதிகாரப்பூர்வமான பத்திரிகையிலே எழுதிய கட்டுரையையும் படித்துப் பார்த்தேன். அவர் இந்த நிதிநிலை