கலைஞரின் சட்டமன்ற உரைகள்
413
எண்ணிக்கை 94 ஆயிரம். நாங்கள் ஆட்சியை விட்டு, கலைக்கப்பட்டு இறங்கிய 1975ஆம் ஆண்டு அந்த 94 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் என்பது 2 இலட்சம் கல்லூரி மாணவர்கள் என்ற உருவாக்கினோம். (மேசையைத் தட்டும் ஒலி
1967 வரையிலே
நிலையை
இருந்த
கல்லூரிகளினுடைய
எண்ணிக்கை 92. 1975இல் இருந்த கல்லூரிகளினுடைய எண்ணிக்கை 189.
பிறகு, அனாதைச் சிறுவர், மகளிர் மறுவாழ்வுத் திட்டம், ஆதரவற்ற மகளிர்க்கு தையல் இயந்திரம் வழங்கும் திட்டம், கருணை இல்லங்கள் தொடங்கும் திட்டம், விதவை மறுமணத் திட்டம், இத்தனைத் திட்டங்களும் 1975இல்தான் தொடங்கப்பட்டன.
1975லேதான் மீனவ மக்களுக்கு சிங்காரவேலர் நினைவாக இலவச வீட்டுவசதித் திட்டம் தொடங்கப்பட்டது.
1989ஆம் ஆண்டு பெண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் - 1929வது ஆண்டு செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் நம்முடைய அவைத் தலைவருடைய தந்தையார் P.T. ராஜன் அவர்களும், W.P. சவுந்தரபாண்டியனாரும் கலந்து கொண்ட அந்த மாநாட்டில் பெரியாரால் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானமான, பண்களுக்குச் சொத்துரிமைச் சட்டம் 1989ஆம் ஆண்டு இந்த அவையிலே நிறைவேற்றப்பட்டது
பிறகு 1989ல் சபாநாயகம், I.A.S. தலைமையில் இரண்டாவது Police Commission அமைக்கப்பட்டு அதனுடைய பரிந்துரைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
1989லேதான் நலிந்த பிரிவினருக்கு இலவச வேட்டி சேலை வழங்குகின்ற திட்டத்தைத் தொடங்கினோம். அதிலே ஒரு ஊரிலே கொடுக்கப்படவில்லை என்பதைச் சொன்னார்கள். அதற்குக் காரணமும் சொன்னார்கள். நல்ல வேட்டி சேலையாக இருப்பதால் எல்லோரும் கேட்கிறார்கள்