கலைஞரின் சட்டமன்ற உரைகள்
465
கொடுங்கள் என்று கேட்கிற அளவுக்கு நல்ல திட்டம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் நண்பர்களாலேயே பாராட்டப்பட்ட திட்டங்கள் எதிர்க்கட்சித் தலைவரால் எந்தப் பயனும் இல்லாத திட்டங்கள் என்று கூறப்பட்டிருப்பதுதான் வியப்புக்குரியதாக இருக்கிறது
நம்முடைய அருமை நண்பர் ஞானசேகரன் அவர்கள் இங்கே பேசும்போது, இதிலே எதுவுமே இல்லை என்று குறிப்பிட்டார்கள். இதில் இதில் எதுவுமே இல்லை என்று எதிர்க்கட்சியில் உள்ளவர்கள், தோழமைக் கட்சிகளாக இருந்து எதிர்க்கட்சியா அல்லது எதிரிக் கட்சியா என்ற இரு நிலைகளுக்கு இடையிலே டையிலே உள்ளவர்கள் உள்ளவர்கள் எல்லோருமே இதைப் பற்றி, ஒன்றும் இல்லை, ஒன்றும் இல்லை என்று கூறியிருக்கின்றார்கள். நானும் மீண்டும் ஒரு முறை - ஒன்றுமே இல்லை, ஒன்றுமே இல்லை என்கிறார்களே!' என்று மீண்டும் ஒரு முறை - நிதிநிலை அறிக்கையைப் படித்துப் பார்த்தேன்.
50 ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படவிருக்கும் குடிநீர்ப் பற்றாக்குறையைச் சமாளித்திட தொலைநோக்குத் திட்டம்; 21ஆம் நூற்றாண்டிற்கு தமிழகத்தை அழைத்துச் செல்ல உயிரியல் தொழில்நுட்பக் கொள்கை Biotechnology. Biotechnology என்பது சாதாரணமானதல்ல. இப்போது வளர்ந்து வருகிற விஞ்ஞானத்தில், குளோனிங் என்கிற முறை வந்திருக்கிறது. அதுவரையிலே வரக்கூடிய ஒரு technology-தான் Biotechnology. வரும் நிதியாண்டில் எஞ்சிய அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும், அரசு கலை மற்றும் தொழில் கல்லூரிகளிலும் பயிலும் மாணவர்களுக்கு கணினி பயிற்சித் திட்டம்: தகவல் தொழில்நுட்பத் துறையில் புதிய நிறுவனங்களைத் தொடங்க முன்வருவோருக்குக் கடன் வழங்க ஊக்க மூலதன நிதி – Ven- ture Capital Fund; கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை போன்ற நகரங்களில் செயற்கைக் கோள் தரை நிலையங்கள், Earth Stations வரும் ஆண்டில் அமைத்துத் தர முடிவு; அனைத்து வட்டாட்சி அலுவலகங்களும் முழுமையாகக் கணினிமயமாக ஆக்கப்படும்; அனைத்துப் பதிவு அலுவலகங்களிலும் கணினி வசதி செய்யப்படும்; வரும் ஆண்டில் 75 ஆயிரம் ஏக்கர் தரிசு நிலங்கள் 24 மாவட்டங்களில் மேம்படுத்தப்படும்; பழங்குடியினர் நலனைக் கவனிக்கத் தனியாக இயக்ககம் உருவாக்க முடிவு; இளைஞர்களுடைய விளையாட்டு