உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/510

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைஞரின் சட்டமன்ற உரைகள்

509

சகாக்களுக்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள் கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) என்பால் அன்பும், பாசமும் கொண்டு, ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்று பாராமல் ஒரே உணர்வோடு உரிமை கொண்டாடி, அன்பு காட்டி வரும் மாண்புமிகு உறுப்பினர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையைத் தட்டும் ஒலி) பேரவையினுடைய செய்திகளை உடனுக்குடன் வெளியிட்டு உறுப்பினர்களையும் உற்சாகப்படுத்துகின்ற பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றியை நான் தெரிவித்துக்கொள்கிறேன். (மேசையை தட்டும் ஒலி)

இங்கே விவாதத்திலே கலந்துகொண்டவர்கள் பல்வேறு விஷயங்களை எடுத்து இங்கே குறிப்பிட்டிருந்தாலும்கூட, அடுத்து என்ன என்ற கேள்வியைக் கேட்டு, "இதுதான் கடைசி யாக நீ இந்த இடத்திலே உட்கார்ந்திருக்கிற காலகட்டம். இதற்கு மேல் நீ உட்கார முடியாது" என்றெல்லாம் ஆரூடம் கூறி அல்லது சபித்து சிலர் தங்களுடைய உரையை நிகழ்த்தி யிருக்கிறார்கள்.நான் அதைப்பற்றி உள்ளபடியே கவலைப்பட வில்லை. அதற்காக நான் வருத்தம் கொள்ளவும் இல்லை. அவர்கள்மீது நான் ஆத்திரப்படவும் இல்லை. நான் முதலமைச்சர் பொறுப்பிலே உட்கார்ந்து 14 ஆண்டுகள் ஆட்சி நடத்தியிருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) 14 ஆண்டுகள், இராமாயண இதிகாசத்திலே இராமன் பட்டபாடுதான். 14 ஆண்டுகள் என்பது உங்களுக்குத் தெரியும். இந்த 14 ஆண்டு காலத்தில், 1969 முதல் 1976 வரை 7 ஆண்டுகளும், 1989 முதல் 1991 வரை இரண்டு ஆண்டுகளும், 1996 முதல் 2001 வரை 5 ஆண்டுகளும் ஆட்சியிலே இருந்து வருகிறேன். இவற்றில் 5 ஆண்டு காலம் மட்டுமல்லாமல் நான் முதன் முதலில் 1969இல் என்னை ஆளாக்கிய அண்ணா தலைவன் பேரறிஞர் அவர்களுடைய மறைவிற்குப் பிறகு முதல்வர் பொறுப்பை ஏற்று ஆட்சி நடத்திய 1969 முதல் 1971 முடிய தீட்டப்பட்ட திட்டங்களில் சிலவற்றை உங்கள் முன்னால் நான் நினைவூட்ட விரும்புகிறேன் கண்ணொளி வழங்கும் திட்டம் பிச்சைக்காரர்கள் மறுவாழ்வுத்திட்டம், கை ரிக்ஷா ஒழிப்புத் திட்டம், மகாத்மா காந்தியடிகளுடைய மனக்குறையை தீர்க்க இந்தியாவிலேயே முதன் முதலாக அவருடைய கொள்கையை நிறைவேற்ற தீட்டப்பட்ட திட்டம்தான் மனிதனை வைத்து மனிதன் இழுக்கின்ற கை ரிக்ஷாக்களை ஒழித்த அந்தத்

என்