உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நிதிநிலை அறிக்கை மீது கலைஞரின் சட்டமன்ற உரை 2.pdf/523

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

522

நிதிநிலை அறிக்கை மீது

கருதுகின்றேன். ஏதோ, 200 கோடி ரூபாய், 300 கோடி ரூபாய் வீரப்பனைப் பிடிக்கின்ற செலவு, போலீசாருக்காக இதுவரையிலே ஆகியிருக்கிறது என்றெல்லாம் பிரச்சாரம் செய்யப்படுகிறது. அது ஒரு வேளை அறியாத காரணத்தால் செய்யப்படுகிற பிரச்சாரமாக இருக்கலாம். அறிந்து வேண்டுமென்றே செய்யப்படுகின்ற பிரச்சாரமாக நான் கருதவில்லை.

தமிழ்நாட்டைப் பொறுத்தரையிலே, 1993-94 முதல் 31-12-2000 வரை தமிழகத்தில் சிறப்பு அதிரடிப்படைக்கான செலவு, ஊதியம் படிகள் அனைத்தும் சேர்த்து, வீரப்பனைத் தேடிச் செல்கின்ற அந்தக் காவல் துறைக்கான செலவு, அவர்களுடைய மாதச் சம்பளம் எல்லாம் உட்பட, 7 கோடியே, 42 இலட்சத்து, 75 ஆயிரத்து 385 ரூபாய். 7 கோடியே 42 இலட்சம். கர்நாடகத்தினுடைய செலவு, 1993- 94 முதல், அக்டோபர் 2000 வரை, கர்நாடகத்தில் சிறப்பு அதிரடிப்படைக்கான செலவு ஊதியம் படிகள் சேர்த்து, அந்தப் படைக்கான ஊதியம் எல்லாம் சேர்த்து, 20 கோடியே, 24 இலட்சத்து, 30 ஆயிரத்து 840 ரூபாய் கர்நாடகத்திற்கு ஆகியிருக்கிற செலவு. தமிழகத்திற்கு ஆகியிருக்கிற செலவு 7 கோடியே 42 இலட்சம் ரூபாய்.

ஏதோ, வீரப்பனிடத்திலே அணுகியிருக்கின்ற தீவிரவாதி களுக்கும், திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கும், நிறைய தொடர்பு இருப்பதைப்போல இந்த அவையிலே பேசப்பட்டது. நேற்றைக்குக்கூட இது பேசப்பட்டிருக்கிறது. வெளியிலேயும் அறிக்கைகள் அவ்வாறு விடப்படுகின்றன. நான் அவர்களுக்கு ஒரு உண்மையைச் சொல்ல விரும்புகிறேன். சொல்லத் தேவையில்லை; இருந்தாலும் சொல்ல விரும்புகிறேன்; தமிழ் தேசிய மீட்புப்படையான டி.என்.ஆர்.டி., தமிழ்நாடு விடுதலைப்படை டி.என்.எல்.ஏ. என்று இரண்டு தீவிரவாத இயக்கங்கள் 1984 85 லேயிலிருந்து இருக்கின்றன. அதிலே அப்பொழுது எல்லாம் அதிகம் பேர் கைது செய்யப்படவில்லை. இப்பொழுது, அந்தத் தமிழ் தேசிய மீட்புப் படையின் சார்பிலே உள்ளவர்கள் 25 பேரும், தமிழ்நாடு விடுதலைப்படையின் சார்பிலே தீவிரவாதிகள் 141 பேரும் கைது செய்யப்பட்டு, சிறையிலே இருக்கிறார்கள். இன்னொன்றையும் சொல்ல விரும்புகின்றேன்.

உள்ள

இந்த இரண்டு தீவிரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டுமென்று தமிழக அரசு, மத்திய அரசுக்கு